Page Loader
UNO விளையாட வாரத்திற்கு ரூ.3.6 லட்சம் சம்பளம் வழங்கும் அமெரிக்க நிறுவனம்
UNO விளையாட வாரத்திற்கு ரூ.3.6 லட்சம் சம்பளம் வழங்கும் அமெரிக்க நிறுவனம்

UNO விளையாட வாரத்திற்கு ரூ.3.6 லட்சம் சம்பளம் வழங்கும் அமெரிக்க நிறுவனம்

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 04, 2023
09:56 am

செய்தி முன்னோட்டம்

நமக்கு பிடித்த, நாம் பொழுதுபோக்கிற்காக விளையாடும் ஒரு விளையாட்டை முழு நேரமாக விளையாடக் கூறி, அதற்கு சம்பளமும் கொடுத்தால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு வாய்ப்பையே அளிக்கவிருக்கிறது மேட்டல் என்ற அமெரிக்க பொம்மை தயாரிப்பு நிறுவனம். உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான கார்டு விளையாட்டான 'உனோ'வினை (UNO) தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது 'உனோ க்வாட்ரோ' என்ற புதிய கார்டு விளையாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது மேட்டல் நிறுவனம். அந்த விளையாட்டை பிரபலப்படுத்தவே புதிய வேலைவாய்ப்பு ஒன்றை உருவாக்கி, அதற்கு ஏற்ற நபரைத் தேடி வருகிறது. 'தலைமை உனோ விளையாட்டு வீரர்' என்ற பதவியையே தற்போது உருவாக்கியிருக்கிறது மேட்டல்.

அமெரிக்கா

எதற்காக இந்தப் பதவி? 

இந்தப் பதவியில் பணியமர்த்தப்படுபவர்கள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சுற்றித்திரிந்து ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்தை இந்த புதிய உனோ க்வாட்ரோ விளையாட்டை விளையாட செலவழிக்க வேண்டும். தினமும் பல்வேறு மக்களை சந்தித்து, அவர்களுக்கு இந்தப் புதிய உனோ க்வாட்ரோ விளையாட்டி விதிமுறைகளை அறிமுகப்படுத்தி, அவர்களுடன் புதிய விளையாட்டை விளையாட வேண்டும். இந்த வேலைக்காக வாரத்திற்கு 4,444 அமெரிக்க டாலர்களை (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3.6 லட்சம்) சம்பளமாக வழங்கவிருக்கிறது அந்நிறுவனம். இதே போல மொபைல் கேமிங்கை மேம்படுத்துவதற்கான தற்காலிக தலைமை கேமிங் அதிகாரி பதவியை இந்தியாவில் வழங்கியது சீனாவைச் சேர்ந்த ஐகூ என்ற ஸ்மார்ட்போன் நிறுவனம். அந்தப் பணியிடத்திற்கு ஆறு மாதத்திற்கு ரூ.10 லட்சம் சம்பளம் வழங்கவிருப்பதாகத் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.