LOADING...
ஊழியர்களின் அலுவலக வருகையைப் பதிவு செய்ய புதிய 'டேஷ்போர்டு' வசதியை அறிமுகப்படுத்தியது அமேசான்
இந்த புதிய வசதியின் மூலம், ஊழியர்களின் 'பேட்ஜ்' (Badge) தரவுகளை நேரடியாக ஆய்வு செய்ய முடியும்

ஊழியர்களின் அலுவலக வருகையைப் பதிவு செய்ய புதிய 'டேஷ்போர்டு' வசதியை அறிமுகப்படுத்தியது அமேசான்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 14, 2026
01:52 pm

செய்தி முன்னோட்டம்

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தனது ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதைக் கண்காணிக்க புதிய உள்நாட்டு மென்பொருள் (Internal Dashboard) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு முதல் வாரத்திற்கு ஐந்து நாட்கள் அலுவலகம் வர வேண்டும் என்ற விதியை அமேசான் கட்டாயமாக்கியுள்ள நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம், மேலாளர்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டு (HR) அதிகாரிகள், ஊழியர்களின் 'பேட்ஜ்' (Badge) தரவுகளை நேரடியாக ஆய்வு செய்ய முடியும். ஊழியர்கள் தினமும் எத்தனை மணிக்கு அலுவலகம் வருகிறார்கள், எவ்வளவு நேரம் அங்கிருக்கிறார்கள் மற்றும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்டிடத்திற்குத்தான் வருகிறார்களா போன்ற விபரங்களை இந்தத் தளம் துல்லியமாகக் காட்டும்.

விவரங்கள்

பேட்ஜ் விவரங்கள் 

இதில் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்திற்கும் குறைவாக அலுவலகத்தில் இருப்பவர்கள் "Low-Time Badgers" என்றும், எட்டு வாரங்களாக அலுவலகம் வராதவர்கள் "Zero Badgers" என்றும் வகைப்படுத்தப்படுகின்றனர். அலுவலகத்திற்கு வந்து சிறிது நேரம் மட்டும் இருந்துவிட்டுச் செல்லும் 'காபி பேட்ஜிங்' (Coffee Badging) முறையைத் தடுக்கவே இத்தகைய தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. இது ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், "இது வெறும் கண்காணிப்பு அல்ல, ஊழியர்களிடையே நேரடி கலந்துரையாடலையும் கலாச்சாரத்தையும் மேம்படுத்தவே இந்த முயற்சி" என அமேசான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சாம்சங், டெல் மற்றும் ஜேபி மோர்கன் போன்ற பிற முன்னணி நிறுவனங்களும் இத்தகைய கண்காணிப்பு முறைகளை ஏற்கனவே பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement