
கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் ஆட்குறைப்பில் இறங்கிய அமேசான்
செய்தி முன்னோட்டம்
அமேசான் தனது கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களில், அமேசான் அதன் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை பணிநீக்கம் செய்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.
சில நாட்களுக்கு முன்பு கூட அமேசான் நிறுவனமானது இந்த ஆண்டு பல மூத்த ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை அதிகரிக்காது என்று தெரிவித்தது.
இப்போது, அந்நிறுவனம் தனது கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவான AWS இலிருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
அறிக்கைகளின்படி, AWS அதன் கடைகளின் தொழில்நுட்பம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
அமேசான்
2 மாத ஊதியம் மற்றும் பலன்களை வழங்கி பணிநீக்கம்
இதற்கிடையில், நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான காலியிடங்கள் உள்ளதால், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கான உள் வாய்ப்புகளைக் கண்டறிய முயற்சிப்பதாக AWS தெரிவித்துள்ளது.
இந்த வேலை நீக்கம், Amazon இன் தற்போதைய மறுசீரமைப்பு முயற்சிகளில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கின்றன.
முன்னதாக கடந்த 2022 இல் பெரும் பணிநீக்கங்களுடன் ஆண்டை தொடங்கிய அமேசான், 2023 ஆண்டு வரை அதனை தொடர்ந்தது.
Twitch, Audible மற்றும் Prime Video உட்பட பல்வேறு வணிக அலகுகளை பாதித்தது. சவால்கள் இருந்தபோதிலும், அமெரிக்காவில் சமீபத்திய பணிநீக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் அனைவருமே குறைந்தபட்சம் 60 நாட்களுக்கு (2 மாத) ஊதியம் மற்றும் பலன்களைப் பெறுவார்கள்.