Loading...
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்? 8வது ஊதியக் குழுவிடம் ஊழியர் சங்கங்கள் வைத்துள்ள 5 கோரிக்கைகள்
8வது ஊதியக் குழுவிடம் ஊழியர் சங்கங்கள் வைத்துள்ள 5 கோரிக்கைகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்? 8வது ஊதியக் குழுவிடம் ஊழியர் சங்கங்கள் வைத்துள்ள 5 கோரிக்கைகள்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 17, 2026
11:05 am

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 8வது ஊதியக் குழு, பல்வேறு ஊழியர் அமைப்புகள் மற்றும் ஓய்வூதிய சங்கங்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. வரும் மே 2027-க்குள் தனது இறுதிப் பரிந்துரைகளை சமர்ப்பிக்கவுள்ள இந்த குழுவிடம், குறைந்தபட்ச அடிப்படை சம்பள உயர்வு, அகவிலைப்படி இணைப்பு மற்றும் பிட்மென்ட் பேக்டர் உயர்வு உள்ளிட்ட 5 முக்கியக் கோரிக்கைகளை ஊழியர் சங்கங்கள் முன்வைத்துள்ளன. கூடுதல் விபரங்கள் இங்கே:-

அகவிலைப்படி

அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வலியுறுத்தல்

7வது ஊதியக் குழுவின் வழிகாட்டுதலின்படி, அகவிலைப்படி 50 சதவீதத்தைக் கடக்கும் போது அது அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

தற்போது அகவிலைப்படி 60 சதவீதத்தைத் தொட்டுள்ள நிலையிலும், மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்டால் ஊழியர்களின் பிஎஃப் பங்களிப்பு, ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் பிற படிகள் பெருமளவில் உயரும் என்பதால், இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.

குறைந்தபட்ச அடிப்படை ஊதியம்

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை ₹69,000 ஆக உயர்த்தக் கோரிக்கை

தற்போதைய பொருளாதார சூழல் மற்றும் விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தைக் கணிசமாக உயர்த்த வேண்டும் என தேசியக் கூட்டு ஆலோசனைக் குழு (NC-JCM) மற்றும் ஏஐடிஇஎஃப் (AIDEF) அமைப்புகள் ₹69,000 ஆக உயர்த்தக் கோரியுள்ளன.

அதேவேளையில், ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் (IRTSA) குறைந்தபட்ச சம்பளத்தை ₹52,600 ஆகவும், பிட்மென்ட் பேக்டரை 2.92 முதல் 3.80 வரை உயர்த்தவும் பரிந்துரை செய்துள்ளது.

ADVERTISEMENT

கணக்கீட்டு முறை

அகவிலைப்படி கணக்கீட்டு முறையில் மாற்றமும் அமலாக்க காலமும்

தற்போதுள்ள அகவிலைப்படி கணக்கீட்டு முறை சாதாரணப் பணியாளர்களின் உணவு, மருத்துவம் மற்றும் வீட்டு வாடகை செலவுகளைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை என்பதால், கணக்கீட்டு சூத்திரத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மே 2027-இல் சமர்ப்பிக்கப்பட்டாலும், அவை முழுமையாக நடைமுறைக்கு வர 2029 அல்லது 2030 வரை ஆகலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் மூலம் 1 கோடிக்கும் அதிகமான ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

ADVERTISEMENT