Loading...
சம்பளம் மட்டும் போதாது! பல வழிகளில் வருமானம் ஈட்டும் 76% ஜென் ஜி இளைஞர்கள்! கிளியர் டாக்ஸ் அறிக்கை
ஜென் ஜி பிரிவினரில் 76% பேருக்கு பல வழிகளில் வருமானம்

சம்பளம் மட்டும் போதாது! பல வழிகளில் வருமானம் ஈட்டும் 76% ஜென் ஜி இளைஞர்கள்! கிளியர் டாக்ஸ் அறிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Jul 31, 2026
11:39 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் வருமான வரி செலுத்துவோரின் முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஒரே ஒரு மாத சம்பளத்தை மட்டுமே நம்பியிராமல், பங்குச் சந்தை முதலீடுகள், ஃப்ரீலான்சிங், தொழில் மற்றும் பிற தொழில்கள் மூலம் பல வழிகளில் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கிளியர் டாக்ஸ் தளம் வெளியிட்டுள்ள 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான ஆரம்பக் கட்டத் தரவுகளின்படி, 25 வயதிற்குட்பட்ட ஜென் ஜி வருமான வரி செலுத்துவோரில் 76 சதவீதம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் வருமானம் ஈட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.

சம்பளம் மட்டும்

பாதிக்கும் கீழாகக் குறைந்த சம்பளம் மட்டும் ஈட்டுவோர் எண்ணிக்கை

வரலாற்றிலேயே முதன்முறையாக, கிளியர் டாக்ஸ் தளத்தில் வரி தாக்கல் செய்தவர்களில் மாத சம்பளத்தை மட்டுமே தங்களது ஒரே வருமானமாகக் கணக்கு காட்டியவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது.

கடந்த 2022-23 மதிப்பீட்டு ஆண்டில் 82 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை, இந்த ஆண்டு வெறும் 42 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட வருமான வழிகளைக் கொண்டிருப்பதே தற்போதைய புதிய வழக்கமாக மாறியுள்ளது தெளிவாகிறது.

வளர்ச்சி

மூலதன ஆதாயம் மற்றும் தொழில்துறை வருமானத்தின் அபார வளர்ச்சி

இந்தியாவில் பங்குச் சந்தைகளில் தனிநபர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதன் காரணமாக, மூலதன ஆதாயம் ஈட்டுபவர்களின் பங்கு 9 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதேபோல, சுயதொழில், ஆலோசனைகள், டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் ஃப்ரீலான்ஸ் பணிகளில் ஈடுபாடு அதிகரித்ததால், தொழில்முறை வருமானத்தை கணக்கு காட்டுபவர்களின் எண்ணிக்கை 4 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாகப் பாய்ந்துள்ளது.

ADVERTISEMENT

மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள் மற்றும் உயர் வருவாய் ஈட்டுவோரிடமும் மாற்றம்

இந்த வருமான பன்முகத்தன்மை இளைஞர்களோடு நிற்காமல் மூத்த குடிமக்களிடமும் எதிரொலிக்கிறது.

மூத்த குடிமக்களில் 53 சதவீதத்திற்கும் அதிகமானோர் பல வழி வருமானங்களைப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், 2026-27 மதிப்பீட்டு ஆண்டில் ₹20 லட்சத்திற்கும் அதிகமான மொத்த வருமானம் ஈட்டியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வரிகளின் பங்கு 32 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

நிதி மேலாண்மை

நிதி மேலாண்மையாக மாறும் வருமான வரித் தாக்கல்

இது குறித்துக் கிளியர் டாக்ஸ் நிறுவனர் மற்றும் சிஇஓ அர்சித் குப்தா கூறுகையில், "2026 வரி தாக்கல் பருவம் இந்தியாவின் நிதிப் பயணத்தில் ஒரு பெரிய மாற்றத்தை பிரதிபலிக்கிறது.

மக்கள் வெறும் சம்பளத்தை மட்டும் நம்பியிருக்காமல் பங்குச் சந்தைகளிலும், தொழில்களிலும் தீவிரமாகப் பங்கேற்கின்றனர்.

இதனால் வரி தாக்கல் என்பது வெறும் சட்டக் கடமையாக இல்லாமல், செல்வத்தை மேலாண்மை செய்யும் ஒரு முக்கியப் பகுதியாக உருவெடுத்துள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT