கியா சொனெட் 2024 - கொடுக்கப்பட்ட புதிய அம்சங்கள் என்னென்ன?
தென் கொரிய வாகன நிறுவனமான கியா மோட்டார்ஸ் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சொனெட்டை வெளியிடும் எனவும், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. கியா நிறுவனம் சொனெட் மட்டுமின்றி, செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் ஆகிய கார்களின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த மாடலில், 2 பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1 டீசல் என்ஜினுடன் மொத்தமாக 3 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் கொடுக்கப்பட்டுள்ளது.
கியா சொனெட் 2024 - முக்கிய அம்சங்கள் விலை என்ன?
இந்த புதிய கியா சொனெட் காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் டாஷ்போர்டு, திருத்தப்பட்ட சென்டர் கன்சோல், ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல், பார்க்கிங் சென்சார்கள், USB சார்ஜர்கள், மல்டிஃபங்க்ஸ்னல் ஸ்டீயரிங் வீல் கொண்ட 5-சீட்டர் கேபின் ஆகியவற்றைப் பெறும். 6 ஏர் பேக்குகள், பின்புற கேமரா, ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையின் மதிப்புபடி கியா சொனெட் காரின் ஆரம்ப விலை 7.79 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட் விலை 14.89 லட்சம் ரூபாய் எக்ஸ் ஷோரூம் ஆகவும் உள்ளது.