NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / புதிய வாகனத்தை உருவாக்கி வரும் ஃபோக்ஸ்வாகன்.. இந்தியாவிற்கான திட்டம் என்ன? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய வாகனத்தை உருவாக்கி வரும் ஃபோக்ஸ்வாகன்.. இந்தியாவிற்கான திட்டம் என்ன? 
    ஃபோக்ஸ்வாகனின் புதிய கார் மாடல்

    புதிய வாகனத்தை உருவாக்கி வரும் ஃபோக்ஸ்வாகன்.. இந்தியாவிற்கான திட்டம் என்ன? 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 25, 2023
    01:59 pm

    செய்தி முன்னோட்டம்

    சர்வதேச சந்தையில் வெளியிடுவதற்கு 3 வரிசை சீட்கள் கொண்ட புதிய கார் ஒன்றை ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    டேரான் என்ற பெயரில் MQB-A2 பிளாட்ஃபார்மில் இந்த புதிய மாடலை உருவாக்கி வருகிறது ஃபோக்ஸ்வாகன். அடுத்த தலைமுறை ஸ்கோடா கோடியாக்கும் இந்த பிளாட்ஃபார்மில் தான் தயாரிக்கப்படவிருக்கிறது.

    2020-ல் இந்தியாவில் விற்பனையில் இருந்து டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடலுக்கு மாற்றாக இந்த புதிய காரை உருவாக்கி வருகிறது ஃபோக்ஸவாகன். 5-சீட்டர் டிகுவானைப் போல இல்லாமல் தனித்து தெரியும் வகையிலேயே டேரான் உருவாக்கப்பட்டு வருகிறது.

    இந்த டேரான் மாடலை இந்தியாவிற்கு கொண்டு வரும் திட்டத்தில் இருக்கிறது ஃபோக்ஸ்வாகன். CKD முறையில் குறைந்த அளவில் இதனை இந்தியாவில் ஃபோக்ஸ்வாகன் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆட்டோ

    ஃபோக்ஸ்வாகனின் திட்டம்: 

    இடது பக்கம் ஓட்டுநர் இருக்கை கொண்ட 5-சீட்டர் டேரான் ஒன்று சீனாவில் விற்பனையில் இருக்கிறது. அந்த மாடலின் அடுத்த தலைமுறை வெர்ஷனாக புதிய டேரானை சர்வதேச வெளியீட்டுக்காக உருவாக்குகிறது ஃபோக்ஸ்வாகன்.

    அடுத்த தலைமுறை கோடியாக்கை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். எனவே, அடுத்த ஆண்டு டேரானின் உற்பத்தியும், அதனைத் தொடர்ந்து 2025-ல் இந்தியாவில் வெளியீட்டையும் நாம் எதிர்பார்க்கலாம்.

    டேரான் மட்டுமல்லாது முழுமையான எலெக்ட்ரிக் காரான ID4 மாடலையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது ஃபோக்ஸ்வாகன்.

    அதனை இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்து வருகிறது அந்நிறுவனம். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ID4-ஐ இந்தியாவில் ஃபோக்ஸ்வாகன் அறிமுகப்படுத்தலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆட்டோமொபைல்
    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    புதிய கார்

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    ஆட்டோமொபைல்

    கவாஸாகி நிறுவனத்தின் புதிய மாடல் வெளியீடு! விலை என்ன? பைக் நிறுவனங்கள்
    எலக்ட்ரிக் வாகனம் சரியில்லை! சர்ச்சையை கிளப்பிய தோனி எலக்ட்ரிக் வாகனங்கள்
    இந்தியாவில் ரூ.252 கோடியில் அப்பார்ட்மென்ட்-ஐ வாங்கிய பஜாஜ் நிறுவனர்! தொழில்நுட்பம்
    பழைய வாகனங்களை அழிக்க தேவையில்லை! மத்திய அரசின் புதிய தகவல் வாகனம்

    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    டெலிவரி ஊழியர்களுக்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - அறிமுகப்படுத்தும் சோமோட்டோ! எலக்ட்ரிக் வாகனங்கள்
    ஹூண்டாய் புதிய சொனாட்டா செடான் - 5 முக்கிய அம்சங்கள் என்ன? ஹூண்டாய்
    பல டிஜிட்டல் நவீன வசதிகளுடன் வெளியான Odysse Vader மின்சார பைக்! எலக்ட்ரிக் வாகனங்கள்
    இந்திய விற்பனையில் கலக்கும் சிட்ரோன் சி3 காரின் ஏற்றுமதி தொடக்கம்! சிட்ரோயன்

    புதிய கார்

    நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷனை வெளியிட்டது டாடா  டாடா மோட்டார்ஸ்
    ரோல்ஸ் ராய்ஸ் உருவாக்கிய பிரத்தியேகமான 'கோஸ்ட்' மாடல் கார்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?  கார்
    இந்தியாவில் தங்களது புதிய 'காமெட் EV'-யை அறிமுகப்படுத்தியது எம்ஜி மோட்டார்!  எம்ஜி மோட்டார்
    லம்போர்கினியின் புதிய ரெவால்டோ ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்.. என்ன ஸ்பெஷல்?  லம்போர்கினி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025