30 லட்சம் WagonR மாடல் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்த மாருதி!
செய்தி முன்னோட்டம்
30 லட்சம் வேகன்ஆர் கார் மாடல்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது மாருதி சுஸூகி.
1999-ம் ஆண்டு முதன் முதலில் வெளியிடப்பட்ட வேகன்ஆர் கார் மாடலானது 24 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மதிப்பைப் பெற்று விற்பனையில் சாதனை படைத்திருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மாருதியின் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் இருந்து வருகிறது இந்த வேகன்ஆர்.
வெளியிடப்பட்ட முதல் ஒன்பது ஆண்டுகளில் 5 லட்சம் கார்கள் விற்பனையானது, அடுத்த நான்கு ஆண்டுகளில் கூடுதலாக ஐந்து லட்சம் வேகன்ஆர்-களை விற்பனை செய்தது மாருதி.
பின்னர், 2015-ல் 15 லட்சம் கார்கள், 21017-ல் 20 லட்சம், 2021-ல் 25 லட்சம் கார்களைத் தொடர்ந்து, தற்போது 30 லட்சம் கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டியிருக்கிறது வேகன்ஆர்.
மாருதி
கடந்த வந்த பாதை:
முதலில் ஹூண்டாயின் சான்ட்ரோ மாடலுக்கு போட்டியாகவே வேகன்ஆரை இந்தியாவில் களமிறக்கியது மாருதி.
66hp பவரை உற்பத்தி செய்யும் 1.0 லிட்டர் இன்ஜின், பவர் விண்டோஸ் மற்றும் ஸ்டீயரிங், 12.9 கிமீ மைலேஜ் மற்றும் உயரமானவர்களும் எளிதாக அமரும் வகையில் இடவசதி என அப்போது சிறப்பாக வசதிகளாக கூறப்பட்ட மேற்கூறிய அம்சங்களுடன் வெளியானது வேகன்ஆர்.
2010-ல் இரண்டாம் தலைமுறை வேகன்ஆர் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 20190-ல் மூன்றாம் தலைமுறை வேகன்ஆரை அறிமுகப்படுத்தியது மாருதி.
தற்போது விற்பனையில் இருப்பது மூன்றாம் தலைமுறை வேகன்ஆர் தான். பெட்ரோல் மற்றும் CNG என இரண்டு இன்ஜின் வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் வேரியன்ட் தற்போது 25.19 கிமீ மைலேஜை வழங்குகிறது.