டெல்லி வந்த புதினின் 'ஆரஸ் செனாட்' கார்: வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள்
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 'பறக்கும் கிரெம்ளின்' என அழைக்கப்படும் தனது சிறப்பு தனி விமானத்தில் டெல்லி வந்து சேர்ந்துள்ளார். இப்பயணத்தில் அவரது அதிநவீனப் பாதுகாப்பு காரான 'ஆரஸ் செனாட்' லிமோசின் காரும் டெல்லிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. 'சக்கரங்கள் கொண்ட கோட்டை' என்று அழைக்கப்படும் இந்த காரின் வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்கள் இதோ
வடிவமைப்பு
காரின் உருவாக்கம் மற்றும் வடிவமைப்பு
ரஷ்ய அரசின் 'கோர்டெஷ்' திட்டத்தின் கீழ், ரஷ்யாவின் 'ஆரஸ் மோட்டார்ஸ்' மற்றும் என்ஏஎம்ஐ (NAMI) உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
சோவியத் காலத்து 'ZIS-110' லிமோசின் காரின் பிரம்மாண்டமான வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு 2018-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த கார் 5,630 மி.மீ நீளம், 2,000 மி.மீ அகலம் மற்றும் 1,700 மி.மீ உயரம் கொண்டது.
இதன் என்ஜின் ஹைப்ரிட் தொழில் நுட்பத்துடன் கூடிய 4.4-லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு V8 இன்ஜின் ஆகும்.
மேலும், 598 குதிரைத்திறன் மற்றும் 880 Nm டார்க் உற்பத்தி செய்யக்கூடியது.
வசதிகள்
பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள்
இந்த கார் 9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லக்கூடும்.
பல அடுக்கு கண்ணாடிகள் மற்றும் காரின் அடியில் உள்ள தடிமனான ஸ்டீல் பிளேட்டிங் மூலம் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் இருந்து முழுப் பாதுகாப்பு அளிக்கிறது.
டயர்கள் முற்றிலும் பஞ்சரானாலும் அல்லது வெடித்தாலும் கார் நிற்காமல் தொடர்ந்து பயணிக்கும்.
என்கிரிப்ட் செய்யப்பட்ட தொலைத்தொடர்பு அமைப்புகள் மற்றும் காலநிலைக்கேற்ப மாறும் சொகுசு இருக்கைகள் இதில் இடம்பெற்றுள்ளன. பொதுமக்களுக்கான பதிப்பு சுமார் ரூ.2.50 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்பட்டாலும், அதிபர் புதின் பயன்படுத்தும் மாடலில் அதிநவீன ராணுவத் தரத்திலான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.