
iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை உயர்த்தி அறிவித்தது டிவிஎஸ்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான ஐக்யூப் மாடலின் விலையை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது டிவிஎஸ் நிறுவனம்.
கடந்த மாதம், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தாங்கள் அளித்து வந்த FAME II மாணியத்தைக் குறைக்கவிருப்பதாகத் தெரிவித்தது மத்திய அரசு. இதனைத் தொடர்ந்து எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலைகள் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
மத்திய அரசின் குறைக்கப்பட்ட மாணியம சரிபாரப்பு ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த நிலையில், எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களும், ஜூன் 1 முதல் தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்தி வருகின்றன.
ஓலா, மேட்டர் எனர்ஜி ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது டிவிஎஸ் நிறுவனமும் தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையேற்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
டிவிஎஸ்
எவ்வளவு விலையேற்றம்?
தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வேரியனட்டைப் பொறுத்து ரூ.17,000 முதல் ரூ.22,000 வரை விலை உயர்வு இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது டிவிஎஸ்.
மேலும், புது டெல்லியில் தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையையும் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
கடந்த மே 20-க்கு முன் புக்கிங் செய்யப்பட்ட ஸ்கூட்டர்கள் ஸ்டார்ண்டர்டு ஐக்யூப் வேரியன்ட்டை ரூ.1.16 லட்சம் விலையில் விற்பனை செய்த நிலையில், மே 21 முதல் ஸ்டாண்டர்டு வேரியன்ட்டை புக்கிங் செய்தவர்கள் ரூ.1.23 லட்சம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறது டிவிஎஸ்.
இதே போல் ஐக்யூப் S வேரியன்டிற்கு ரூ.9,500 வரை விலையைக் கூட்டி அறிவித்திருக்கிறது. மேற்கூறிய விலைகள் டெல்லியின் ஆன்-ரோடு விலை என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் ஐக்யூபின் ப்ரீமியம் வேரியன்ட்டான ST-யின் புக்கிங்குகளை நிறுத்தி வைத்திருக்கிறது டிவிஎஸ்.