டொயோட்டா டைசர் உலகளவில் ஸ்டார்லெட் கிராஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது
ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா சமீபத்தில் இந்திய சந்தையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்ஸர் என்ற புதிய மாடலை அறிமுகம் செய்தது. இந்த வாகனம் அடிப்படையில் மாருதி சுஸுகி ஃபிராங்க்ஸின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாகும். இது தனித்துவமான வடிவமைப்பு கூறுகளைக் கொண்டுள்ளது. டைசர் சர்வதேச சந்தைகளுக்கும் சேர்த்து உருவாக்கப்பட்டதாகும். உலகளவில் அது டொயோட்டா ஸ்டார்லெட் கிராஸ் என அழைக்கப்பட உள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஸ்டார்லெட் என விற்கப்படும் இந்திய தயாரிப்பான க்ளான்ஸாவின் நன்றாக விற்பனை ஆனதால், டொயோட்டா டைசருக்கு ஸ்டார்லெட் கிராஸ் என மறுபெயரிடப்பட்டுள்ளது.
ஸ்டார்லெட் கிராஸின் தயாரிப்பு விவரங்கள்
இந்த நடவடிக்கை தென்னாப்பிரிக்காவில் கிடைக்கும் டொயோட்டாவின் இந்திய தயாரிப்புகளின் வரிசையை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்லெட் கிராஸின் உற்பத்தி இந்தியாவில் உள்ள மாருதி சுசுகியின் குஜராத் ஆலையில் நடைபெறும். உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு தேவையானஸ்டார்லெட் கிராஸ் கார்கள் அங்கு உற்பத்தி செய்யப்படும். இந்திய மற்றும் உலகளாவிய மாடல்களுக்கு இடையிலான முக்கிய வேறுபாடு அவற்றின் இயந்திரங்கள் ஆகும். ஸ்டார்லெட் கிராஸில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெறும். இந்த மாடல் எஞ்ஜின்கள் தென்னாப்பிரிக்காவில் விற்கப்படும் ஃபிராங்க்ஸ், க்ளான்ஸா மற்றும் பலேனோ மாடல்களிலும் காணப்படுகிறது.