LOADING...
பட்ஜெட் விலையில் எலக்ட்ரிக் கார்: 2026ல் உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பரிசளிக்க உகந்த 5 சிறந்த EV கார்கள்
2026ல் உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பரிசளிக்க உகந்த 5 சிறந்த EV கார்கள்

பட்ஜெட் விலையில் எலக்ட்ரிக் கார்: 2026ல் உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பரிசளிக்க உகந்த 5 சிறந்த EV கார்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 22, 2026
01:46 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நுகர்வோர் பலரும் எலக்ட்ரிக் வாகனங்களை (EV) நோக்கி மிக வேகமாக நகர்ந்து வருகின்றனர். குறிப்பாக நடப்பு 2026 ஆம் ஆண்டில், வாகனங்களின் ஆரம்ப விலையைக் குறைக்கப் பல முன்னணி நிறுவனங்கள் பேட்டரி வாடகைத் திட்டத்தை (Battery-as-a-Service) அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் காரின் விலையில் பல லட்சம் ரூபாய் குறைவதால், உங்கள் குடும்பத்தினருக்கோ அல்லது அன்பானவர்களுக்கோ ஒரு சிறந்த எலக்ட்ரிக் காரைப் பரிசளிப்பது தற்பொழுது மிகவும் சுலபமாகியுள்ளது. அப்படிப்பட்ட 5 சிறந்த பட்ஜெட் எலக்ட்ரிக் கார்களை இங்கு பார்ப்போம்.

#1

நகரப் பயன்பாட்டிற்கு ஏற்ற மிக மலிவான எம்ஜி காமட் இவி

நீங்கள் மிகக் குறைந்த பட்ஜெட்டில் ஒரு காரைப் பரிசளிக்க நினைத்தால், அதற்கு எம்ஜி காமட் இவி மிகச் சிறந்த தேர்வாகும். இதன் ஆரம்ப விலை ₹7.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். ஆனால், நிறுவனத்தின் BaaS திட்டத்தின் கீழ் பேட்டரியைத் தனியாக வாடகைக்கு (ஒரு கிலோமீட்டருக்கு ₹3.20) எடுப்பதன் மூலம் வெறும் ₹4.99 லட்சத்திற்கே இந்த காரை வாங்க முடியும். இதில் உள்ள 17.3kWh பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 230 கிமீ மைலேஜ் தரும் என்பதால், நகரத்திற்குள் தினமும் பயணிக்கும் பெண்களுக்கு இது ஒரு கச்சிதமான பரிசாகும்.

#2

டாடா நிறுவனத்தின் அசாத்தியமான டாடா பஞ்ச் இவி

டாடா நிறுவனத்தின் மிகப்பிரபலமான சிறிய எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் தான் இந்த டாடா பஞ்ச் இவி ஆகும். இதன் ஆரம்ப விலை ₹9.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 40kWh எல்எஃப்பி (LFP) பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருமுறை முழுமையாகச் சார்ஜ் செய்யப்பட்டால் அதிகபட்சமாக 468 கிமீ வரை செல்லும் எனச் சான்றளிக்கப்பட்டுள்ள போதிலும், நிஜ உலகப் பயன்பாட்டில் 355 கிமீ வரை தாராளமாக மைலேஜ் கொடுக்கும். மேலும் இந்த காரில் 6 ஏர்பேக்குகள் மற்றும் அதிவேக சார்ஜிங் வசதிகளும் அமைந்துள்ளன.

Advertisement

#3

பிரம்மாண்ட சொகுசு வசதிகள் கொண்ட எம்ஜி வின்ட்சர் இவி

ஃபேமிலி காராகப் பரிசளிக்க ஏதுவான ஒரு மாடல் தான் எம்ஜி வின்ட்சர் இவி ஆகும். இதன் உண்மையான விலை ₹14.09 லட்சம் என்றாலும், பேட்டரி வாடகைத் திட்டத்தின் கீழ் இதன் ஆரம்ப விலையை ₹9.99 லட்சமாகக் குறைத்துக் கொள்ள முடியும். இதற்கான பேட்டரி வாடகை ஒரு கிலோமீட்டருக்கு ₹3.99 முதல் தொடங்குகிறது. இதில் உள்ள 52.9kWh பேட்டரி 449 கிமீ மைலேஜ் தரக்கூடியது. இந்த காரின் பின் இருக்கைகள் 135 டிகிரி வரை சாயும் வசதி கொண்டவை என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.

Advertisement

#4

5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற டாடா நெக்ஸான் இவி

பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தாராளமாக டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) காரைத் தேர்வு செய்யலாம். பாரத் NCAP அமைப்பிடம் இருந்து முழுமையான 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற இந்த காரின் விலை ₹12.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. இதில் உள்ள 46.08kWh பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 489 கிமீ மைலேஜ் தரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் வெறும் 8.9 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டதுடன், அவசர காலங்களில் பிற சாதனங்களுக்கு மின்சாரம் வழங்கும் வசதியையும் கொண்டுள்ளது.

#5

அதிநவீன கூபே ஸ்டைலில் கலக்கும் டாடா கர்வ் இவி

இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் ஒரு ஸ்போர்ட்டியான காரைப் பரிசளிக்க விரும்பினால், டாடா கர்வ் இவி மிகச் சிறந்த பிரீமியம் தேர்வாகும். இதன் ஆரம்ப விலை ₹16.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இந்த காரில் உள்ள பெரிய 55kWh பேட்டரி பேக், டாடா நிறுவனத்தின் இவி கார்களிலேயே மிக அதிகப்படியாக 502 கிமீ மைலேஜ் தரக்கூடியது. லெவல் 2 ஏடிஏஎஸ் போன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகள், 6 ஏர்பேக்குகள் மற்றும் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட அகலமான பூட் ஸ்பேஸ் ஆகியவை இந்த காரின் பிரதான அம்சங்கள் ஆகும்.

Advertisement