2023-ல் அறிமுகமான டாப் 5 கான்செப்ட் கார்கள்
இந்த 2023ல் உலகளாவிய கார் தயாரிப்பு நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கார்கள் மட்டுமின்றி, புதிய கவனிக்கத்தக்க கான்செப்ட் கார்கள் சிலவற்றையும் அறிமுகப்படுத்தியிருக்கின்றன. அப்படி இந்த ஆண்டு வெளியான கான்செப்ட் கார்களில் சிறப்பான ஐந்து கான்செப்ட் கார்களின் பட்டியலே இது. தங்களுடைய புதிய கான்செப்ட் காரான 'i விஷன் Dee'-யை CES 2023 நிகழ்வில் அறிமுகப்படுத்தியது பிஎம்டபிள்யூ. தங்களுடைய புதிய நியூ கிளாஸ் பிளாட்ஃபார்மில் இந்த கான்செப்ட் காரை உருவாக்கியிருந்தது அந்நிறுவனம். AR வசதிகளுடன் கூடிய புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் காரான ஆக்டிவ்ஸ்பியரை இந்தாண்டு பெர்லினில் அறிமுகப்படுத்தியிருந்தது ஜெர்மனைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி.
இந்தாண்டு வெளியான கான்செப்ட் கார்கள்:
தாங்கள் ஸ்போர்ட் கார்களை உருவாக்கத் தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக, 'மிஷன் X' என்ற கான்செப்ட் காரை இந்தாண்டு அறிமுகப்படுத்தியிருந்தது போர்ஷே. தங்களுடைய லைன்அப்பில் கூப் EV மாடலாக இந்தக் காரை வடிவமைத்திருந்தது போர்ஷே. அடுத்து வரும் ஆண்டுகளில் அறிமுகப்படுத்த வாய்ப்பிருக்கும் வகையிலான LF-ZC கான்செப்ட் காரை இந்தாண்டு நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தியது லெக்சஸ். மாறுபட்ட டிசைனுடன், புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களையும் இந்தக் காரில் பயன்படுத்தியிருந்தது லெக்சஸ். இந்தாண்டு லாஸ் வேகாஸில் நடைபெற்ற CES 2023-ல் அறிமுகமான மற்றொரு கான்செப்ட் கார் 'ப்யூகாட் இன்செப்ஷன்'. ஸ்டெல்லான்டிஸ் நிறுவனத்தின் STLA லார்ஜ் பிளாட்ஃபார்மின் மீது இந்தப் புதிய கான்செப்ட் காரை கட்டமைத்து காட்சிப்படுத்தியிருந்தது ப்யூகாட்.