Loading...
இந்திய ஆட்டோமொபைல் துறையில் பிரம்மாண்ட கூட்டணி! 50 நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்ய டாடா - ஸ்டெல்லாண்டிஸ் ஒப்பந்தம்
50 நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்ய டாடா - ஸ்டெல்லாண்டிஸ் ஒப்பந்தம்

இந்திய ஆட்டோமொபைல் துறையில் பிரம்மாண்ட கூட்டணி! 50 நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்ய டாடா - ஸ்டெல்லாண்டிஸ் ஒப்பந்தம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 12, 2026
06:40 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு மற்றும் சர்வதேச வாகனக் குழுமமான ஸ்டெல்லாண்டிஸ் ஆகிய இரண்டும் தங்களது கூட்டாண்மையை விரிவாக்கியுள்ளன. அதிநவீன வாகனத் தொழில்நுட்பம் மற்றும் புதிய தயாரிப்பு மேம்பாட்டிற்காக அக்டோபர் 12, 2026 அன்று இந்த இறுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் புதிய வாகனங்கள் உலகின் 50-க்கும் மேற்பட்ட சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

தொழில்நுட்பப் பகிர்வு

தொழில்நுட்பப் பகிர்வும் தயாரிப்பு வடிவமைப்பு முறைகளும்

கடந்த பிப்ரவரி 2026-இல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகவே இந்த இறுதி உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிநவீன தயாரிப்புத் தொழில்நுட்பம் மற்றும் வாகனக் கூட்டமைப்புகளை ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும்.

சர்வதேச நுகர்வோரின் விருப்பங்கள், விதிகள் மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்பத் தனது பொறியியல் திறனைக் கொண்டு ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம் இந்த வாகனங்களை மறுவடிவமைப்பு செய்யும்.

ஏற்றுமதி இலக்குகள்

இந்தியாவில் உற்பத்தி மற்றும் உலகளாவிய ஏற்றுமதி இலக்குகள்

இந்த கூட்டணியின் கீழ் உருவாக்கப்படும் அனைத்து புதிய வாகனங்களும் ஃபியட் இந்தியா ஆட்டோமொபைல்ஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும்.

இது டாடா மோட்டார்ஸ் மற்றும் ஸ்டெல்லாண்டிஸ் ஆகிய இரு நிறுவனங்களின் 50:50 கூட்டு நிறுவனமாகும்.

இந்தியாவின் சிறந்த பொறியியல் திறன், உற்பத்தி வசதி மற்றும் குறைந்த உற்பத்திச் செலவு ஆகியவற்றை உலக அளவில் பயன்படுத்த இந்த கூட்டணி உதவும்.

மேலும், சர்வதேச வாகன ஏற்றுமதி மையமாக இந்தியா உருவெடுக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

ADVERTISEMENT

எதிர்காலத் திட்டம்

இரு நிறுவனத் தலைவர்களின் கருத்துகளும் எதிர்காலத் திட்டமும்

இந்த ஒப்பந்தம் குறித்துத் டாடா மோட்டார்ஸ் சிஇஓ சைலேஷ் சந்திரா கூறுகையில், "இரு நிறுவனங்களின் இருபதாண்டு காலக் கூட்டாண்மையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்" என்றார்.

ஸ்டெல்லாண்டிஸ் ஆசிய-பசிபிக் அதிகாரி தியான்ஷு சின் கூறுகையில், "இந்தியாவின் திறமையைப் பயன்படுத்தி சர்வதேச சந்தைகளுக்கு போட்டியான வாகனங்களை உருவாக்குவோம்" என்றார்.

உலகளவில் 14 பிரபல பிராண்டுகளை வைத்துள்ள ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனத்துடன் இணைந்த இந்த முயற்சி இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்குப் பெரும் பலம் சேர்க்கும்.

ADVERTISEMENT