இந்தியாவில் பஞ்ச் EVயின் டெலிவரிகளை தொடங்கியது டாடா மோட்டார்ஸ்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டாடா பஞ்ச் EVயின் டெலிவரிகளை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் தொடங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டாடா பஞ்ச் EVஐ ரூ.11 லட்சத்துக்கு(எக்ஸ்-ஷோரூம்) இந்தியாவில் அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். டாடா பஞ்ச் EVக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி நடந்து வந்த நிலையில், இன்று பஞ்ச் EVயின் டெலிவரிகளை டாடா மோட்டார்ஸ் தொடங்கியுள்ளது. ஸ்மார்ட், ஸ்மார்ட்+, அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு+ ஆகிய ஐந்து வெவ்வேறு வகைகளில் பஞ்ச் EV தற்போது இந்தியாவில் கிடைக்கிறது. முதல் இரண்டு வகைகளும் ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் பதிப்பிற்கு பிரத்தியேகமானவை, மீதமுள்ள மூன்று வகைகளும் ஸ்டாண்டர்ட் மற்றும் லாங் ரேஞ் பதிப்புகளுக்கு வழங்கப்படுகின்றன.
டாடா பஞ்ச் EVயின் சிறப்பம்சங்கள்
இந்தியாவில், டாடா பஞ்ச் EVயின் பேஸ்-எண்ட் ஸ்மார்ட் மாடல் ரூ.10.99 லட்சம் ஆரம்ப விலைக்கு விற்கப்படுகிறது. ரேஞ்ச்-டாப்பிங் எம்பவர்டு+ S LR AC FC பதிப்பிற்கு ஏற்ப இதன் விலை ரூ.15.49 லட்சம் வரை உயர்த்தப்படலாம். ICE மாதிரி போலவே வடிவமைக்கப்பட்டுள்ள டாடா பஞ்ச் EV, மெலிதான முழு அகல LED பகல்நேர இயங்கும் விளக்கு மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் போன்ற சிறிய மேம்படுத்தல்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோக, காற்றோட்டம் கொண்ட முன் இருக்கைகள், ஒரு காற்று சுத்திகரிப்பு, ஒரு மின்னணு பார்க்கிங் பிரேக், ஒரு குரல் கட்டுப்படுத்தப்பட்ட மின்சார சன்ரூஃப், ஒரு வயர்லெஸ் சார்ஜர் மற்றும் 360-டிகிரி-வியூ கேமரா அமைப்பு ஆகியவை இந்த காரில் உள்ள மற்ற வசதிகளாகும்.