இந்தியாவில் நெக்ஸான் EV, டியாகோ EVயின் விலையை குறைத்தது டாடா மோட்டார்ஸ்
இந்தியாவில் அதன் நெக்ஸான் EV மற்றும் டியாகோ EV மாடல்களின் விலையை டாடா மோட்டார்ஸ் குறைத்துள்ளது. டியாகோ EV தற்போது ரூ.70,000 குறைந்து ரூ.7.99 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. மேலும் நெக்ஸான் EV தற்போது ரூ.1.2 லட்சம் வரை குறைந்து ரூ.14.49 லட்சத்திற்கு விற்பனையாகிறது. நெக்ஸான் EVயின் லாங் ரேஞ் மாடல் தற்போது ரூ. 16.99 லட்சத்திற்கு(அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்) விற்பனையாகிறது. பேட்டரி செல்களின் விலை குறைவதால் மேற்கூறிய மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. பேட்டரி செல்கள் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பை வழங்க முடிகிறது என்று TPEM இன் தலைமை வணிக அதிகாரி விவேக் ஸ்ரீவத்சா கூறியுள்ளது.
நெக்ஸான் EV, டியாகோ EVயின் அம்சங்கள்
"சமீப காலங்களில் பேட்டரி செல்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக கிடைக்கும் நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்." என்று அவர் கூறியுள்ளார். மின்சார வாகனங்களின் விலையை குறைத்து, அதன் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் EV சந்தையை வளர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டியாகோ EV, XE, XT, XZ+ மற்றும் XZ+ Lux ஆகிய நான்கு டிரிம்களில் கிடைக்கிறது. அதில் மீடியம் ரேஞ் மற்றும் லாங் ரேஞ் என்ற இரண்டு பதிப்புகள் உள்ளன. இந்த மாடல்களுக்கான உரிமை கோரப்பட்ட ஓட்டுநர் வரம்பு 250-315 கிமீ இடையே உள்ளது.