Page Loader
இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்யவிருக்கும் சுஸூகி மோட்டார் நிறுவனம்!
இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்யவிருப்பதாக தெரிவித்திருக்கிறது சுஸூகி நிறுவனம்

இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்யவிருக்கும் சுஸூகி மோட்டார் நிறுவனம்!

எழுதியவர் Prasanna Venkatesh
May 12, 2023
12:06 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அதிகளவிலான முதலீடுகளை செய்யவிருப்பதாக தெரிவித்திருக்கிறார் சுஸூகி மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் கெய்னிச்சி ஆயூக்கவா. மத்திய நிதியமைச்சகம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆயூக்கவா பேசும் காணொளி ஒன்றைப் பதிவிட்டிருக்கிறது. அதில் மாருதி சுஸூகியின் உற்பத்தி அளவை வருடத்திற்கு ஒரு மில்லியனியான உயர்த்த கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர். மேலும், இந்திய அரசின் உதவி இல்லாமல் சாத்தியப்படுத்தியிருக்க முடியாது எனவும் தெரிவித்திருக்கும் அவர், மத்திய அரசின் PLI திட்டத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். மாருதி சுஸூகி இந்தியா நிறுவனத்தில் 56% பங்கைக் கொண்டிருக்கிறது சுஸூகி மோட்டார் நிறுவனம். உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா விளங்குவது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post