Scorpio N மாடலின் விலையை மீண்டும் உயர்த்தியது மஹிந்திரா!
செய்தி முன்னோட்டம்
கடந்த நான்கு மாதங்களில் இரண்டாவது முறையாக ஸ்கார்பியோ-N மாடலின் விலையை உயர்த்தியிருக்கிறது மஹிந்திரா நிறுவனம்.
கடந்த ஜனவரி மாதம் தான் ஸ்கார்பியோ-N மாடலின் முதல் விலையேற்ற அறிவிப்பை வெளியிட்டது மஹிந்திரா. அப்போது குறைந்தபட்சமாக ரூ.15,000 முதல் அதிகபட்சமாக ரூ.1.01 லட்சம் வரை அதன் விலையை உயர்த்தியது மஹிந்திரா.
தற்போது ரூ.51,299 வரை ஸ்கார்பியோ-N மாடல் காரின் விலையை உயர்த்தியிருக்கிறது மஹிந்திரா.
Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L என ஐந்து வேரியன்ட்களில் கடந்த ஆண்டு ஜூலையில் இந்தியாவில் வெளியானது ஸ்கார்பியோ-N மாடல்.
ஆட்டோ
விலையேற்ற விபரம்:
கடந்த ஆண்டு வெளியீட்டின் போது, ரூ.11.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்தது ஸ்கார்பியோ N-ன் தொடக்க நிலை மாடல்.
தற்போது அதன் தொடக்க நிலை பெட்ரோல் வேரியன்டானது ரூ.13.06 எக்ஸ்-ஷோரூம் விலையிலும், தொடக்க நிலை டீசல் வேரியன்டானது ரூ.13.56 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.
ஸ்கார்பியோ N-ன் டாப் எண்டான Z8L, 4 வீல் ட்ரைவ், 7 சீட்டர் மாடலானது ரூ.24.51 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது.
ஸ்கார்பியோ N-ன் தொடக்க நிலை வேரியன்ட்களிலும் பாதுகாப்பு அம்சங்களான எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (Electronic Stability Control) மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் (Hill Hold Assist) ஆகிய அம்சங்களை மஹிந்திரா வழங்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.