Loading...
புதிய ஹிமாலயன் 440: ராயல் என்ஃபீல்டு பிரியர்கள் எதிர்பார்க்கும் 5 மாஸ் மாற்றங்கள்; முழு விவரம்
புதிய ஹிமாலயன் 440 மாடலின் முக்கிய அம்சங்கள்

புதிய ஹிமாலயன் 440: ராயல் என்ஃபீல்டு பிரியர்கள் எதிர்பார்க்கும் 5 மாஸ் மாற்றங்கள்; முழு விவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 03, 2026
01:18 pm

செய்தி முன்னோட்டம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய ஹிமாலயன் 440 பைக் மாடலை நாளை (செப்டம்பர் 4, 2026) லடாக்கில் உள்ள தனது பேஸ்கேம்பில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே நிறுத்தப்பட்ட ஹிமாலயன் 411 மாடலின் எளிமையான வடிவமைப்பையும், ஸ்க்ராம் 440 மாடலின் தொழில்நுட்ப அடிப்படையையும் இணைத்து இந்த புதிய அட்வென்ச்சர் பைக் உருவாக்கப்பட்டுள்ளது. ஹிமாலயன் 450 வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த 5 முக்கிய அம்சங்கள் மிக முக்கியமானவையாகும்.

#1

புதிய டிஜிட்டல் - அனலாக் கன்சோல்

பழைய ஹிமாலயன் 411 மாடலில் இருந்த விமான பாணி வட்ட வடிவ மீட்டருக்குப் பதிலாக, இதில் ஸ்க்ராம் 440 மாடலில் உள்ளது போன்ற புதிய மீட்டர் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது.

இதில் அனலாக் ஸ்பீடோமீட்டருடன் சிறிய டிஜிட்டல் திரை மற்றும் வழிகாட்டுதலுக்கான தனியான ட்ரிப்பர் நேவிகேஷன் பாட் இடம்பெற்றுள்ளது.

இது பழைய மாடலின் பாரம்பரியத் தோற்றத்தை மாற்றினாலும், கூடுதல் பயன்பாட்டு வசதிகளை வழங்குகிறது.

#2

சக்திவாய்ந்த 440cc இன்ஜின் மற்றும் 6-ஸ்பீட் கியர்

இந்த பைக்கில் 443cc ஏர்/ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது 25.4 பிஎச்பி ஆற்றலையும் 34 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

பழைய 411 மாடலில் 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் மட்டுமே இருந்த நிலையில், இதில் 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் கியர் நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் செல்லும்போது அதிர்வுகளற்ற சீரான பயண அனுபவத்தைத் தரும்.

ADVERTISEMENT

#3

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சந்தை நிலை

புதிய ஹிமாலயன் 440 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ₹2.50 லட்சம் வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இது குறைந்த விலையிலான ஸ்க்ராம் 440 மாடலுக்கு மேலாகவும், அதிக செயல்திறன் கொண்ட ஹிமாலயன் 450 மாடலுக்குக் கீழாகவும் களமிறக்கப்படுகிறது.

குறைந்த பட்ஜெட்டில் கரடுமுரடான அட்வென்ச்சர் பைக்கை விரும்புபவர்களுக்கு இது மிகச்சிறந்த மாற்றாக இருக்கும்.

ADVERTISEMENT

#4

சுவிட்சபிள் ரியர் ஏபிஎஸ் வசதி

கரடுமுரடான ஆஃப்-ரோடு பாதைகளில் பயணிக்கும் ரைடர்களின் வசதிக்காக, இதில் சுவிட்சபிள் ரியர் ஏபிஎஸ் வசதி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் ஆஃப்-ரோடு சவால்களின் போது பின்பக்க பிரேக்கிங் உதவியைத் தேவைக்கேற்ப முடக்கி வைத்துக்கொண்டு, பைக்கை எளிதாகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

#5

ராயல் என்ஃபீல்டின் விரிவடையும் ஹிமாலயன் சீரிஸ்

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஹிமாலயன் சீரிஸை மூன்று பிரிவுகளாகக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

அதன் தொடக்கமாகவே இந்த 440cc மாடல் அறிமுகமாகிறது.

இதற்கடுத்து முதன்மை மாடலான ஹிமாலயன் 750cc மற்றும் எதிர்காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் ஹிமாலயன் எலக்ட்ரிக் ஆகிய மாடல்களையும் வரிசையாக அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT