அப்டேட் செய்யப்பட்ட '2024 போர்ஷே கேயன்'.. என்னென்ன மாற்றங்கள்?
அப்டேட் செய்யப்பட்ட 2024 கேயன் மாடலை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷே. காஸ்மெடிக் மாற்றங்கள், இன்ஜின் மேம்பாடு, புதிய வசதிகள் என அனைத்து ஏரியாக்களிலும் அப்டேட்களை அள்ளித் தெளித்திருக்கிறது போர்ஷே. எனவே, முந்தைய கேயனை விட அனைத்து விதங்களிலும் இது சிறப்பான காராக இருக்கும் என்பதில் சந்தேகமுமில்லை. இந்த கேயனைல் HD மேட்ரிக்ஸ் முகப்பு விளக்குகளை ஸ்டாண்டர்டாகவே கொடுத்திருக்கிறது போர்ஷே. அதன் 3-டைமன்ஷனல் டெயில் லைட்டானது, பின்பக்கம் டெயல்கேட் முழுவதும் நீளமான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. ஆர்டிக் கிரே, அல்கார்வ் ப்ளூ மெட்டாலிக் மற்றும் மான்டேகோ ப்ளூ மெட்டாலிக் என மூன்று புதிய கலர் ஆப்ஷன்களிலும் வெளியாகியிருக்கிறது புதிய 2024 கேயன்.
இன்ஜின் மற்றும் விலை:
348hp பவர் மற்றும் 499Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு V6 இன்ஜின் மற்றும் 463hp பவரை வெளிப்படுத்தக்கூடிய, எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்ட V6 ஹைபிரிட் இன்ஜின் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியாகியிருக்கிறது. இது தவிர 468hp பவர் மற்றும் 599Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 4.0 லிட்டர் ட்வின் டர்போ V8 இன்ஜினைக் கொண்ட S-ட்ரிம் வேரியன்டும் இருக்கிறதாம். இந்திய மதிப்பில் சுமார் ரூ.66.3 லட்சத்தில் தொடங்கி ரூ.1.6 கோடி வரை நீள்கிறது 2024 கேயன் வேரிடன்ட்களின் விலைப்பட்டியல். அமெரிக்காவில் தற்போது புக்கிங்குகள் தொடங்கியிருக்கும் நிலையில், விரைவில் டெலிவரி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. CBU முறையில் இந்த 2024 கேயனை போர்ஷே இந்தியாவிற்கு கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.