இத்திட்டத்தின் மூலம் 2.15 லட்சத்திற்கும் அதிகமான உதான் விமானங்கள் இயங்குகிறது
உதான்(UDAN), இந்திய அரசின் வட்டார வானூர்தி நிலையங்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உதவும் திட்டமாகும். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தொடங்கிய இத்திட்டத்தின் மூலம் நாட்டின் பொதுமக்கள் அனைவரும் பறந்திட வேண்டும் என்றும், நாட்டில் உள்ள 2 -ஆம், 3-ஆம் நிலை நகரங்களில், அறிமுகம் செய்தனர். அரசாங்கத்தின் ஆர்சிஎஸ் கீழ் 2 நீர் ஏரோட்ரோம்கள் மற்றும் 9 ஹெலிபோர்ட்கள் உட்பட 70 விமான நிலையங்கள், 453 வழித்தடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 2.15 லட்சத்திற்கும் அதிகமான உதான் விமானங்கள் இயக்கப்பட்டு, இதுவரை 1.1 கோடி பயணிகள் உதான் விமானங்களின் சேவையை பெற்றுள்ளனர். மேலும் மலிவு விலையில் விமான இணைப்பை வழங்க முடிந்தது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று மக்களவையில் தெரிவித்து உள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையம்
"இந்தத் திட்டத்தின் மூலம் 1,000 UDAN வழித்தடங்களைச் செயல்பாட்டில் வைக்கவும், 2024 ஆம் ஆண்டுக்குள் 100 செயல்படாத விமான நிலையங்கள் / ஹெலிபோர்ட்கள் / நீர் ஏரோட்ரோம்களை புதுப்பிக்கவும் / மேம்படுத்தவும் அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது," என்றும் கூறியது. மாநில அரசுகளின் கீழ் உள்ள விமான நிலையங்கள், இந்திய விமான நிலைய ஆணையம், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சிவில் என்கிளேவ்களின் கீழ் உள்ள சேவை குறைந்த மற்றும் சேவையில்லா விமான நிலையங்கள்/விமான ஓடுதளங்களை புதுப்பிக்க ரூ.4,500 .4,500 கோடிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம், UDAN-ன் கீழ் உள்ள விமான நிலைய மேம்பாட்டை கண்காணிக்கிறது, மேலும் அமைச்சகம், பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து அந்த ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.