NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்தியாவில் வெளியானது 'ஓக்கினாவா OKHi-90' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் வெளியானது 'ஓக்கினாவா OKHi-90' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
    இந்தியாவில் வெளியானது 'ஓக்கினாவா OKHi-90' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    இந்தியாவில் வெளியானது 'ஓக்கினாவா OKHi-90' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 19, 2023
    03:04 pm

    செய்தி முன்னோட்டம்

    2023-ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட OKHi-90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஓக்கினாவா நிறுவனம். கடந்த 2022-ல் இந்த மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஓக்கினாவா. அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மாதத்திலேயே 10,000 முன்பதிவுகளைப் பெற்றது இந்த மாடல்.

    தற்போது இந்த அப்டேட் செய்யப்பட்ட மாடலில் புதிய எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொடுத்திருப்பதோடு, பல்வேறு கனெக்டிவிட்டி வசதிகளையும் அளித்திருக்கிறது ஓக்கினாவா.

    இத்தாலியைச் சேர்ந்த எலெக்ட்ரிக் பைக் உற்பத்தியாளரான டேக்டிகாவுடன் இணைந்து உருவாக்கிய 3.8kW எலெக்ட்ரிக் மோட்டாரை புதிய OKHi-90-யில் கொடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

    இந்த புதிய எலெக்ட்ரிக் மோட்டாரானது, எளிதாக சர்வீஸ் செய்யும் வகையிலும், நன்றாக வெப்பத்தைக் கையாளும் வகையிலும் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஓக்கினாவா.

    ஓக்கினாவா

    ஓக்கினாவா OKHi-90: விலை மற்றும் பிற வசதிகள்

    புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.6kWh லித்தியம்-அயன் பேட்டரியைக் கொடுத்திருக்கிறது ஓக்கினாவா. அதிகபட்சமாக 90 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது, ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கிமீ வரை செல்லும் திறனைப் பெற்றிருக்கிறது.

    சாதாரண சார்ஜரின் மூலம் சார்ஜ் செய்தால், 5 முதல் 6 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடுகிறது இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.

    எல்இடி லைட்டுகள், 40 லிட்டர் பூட் ஸ்பேஸ், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, நோட்டிபிகேஷன் மற்றும் கால் அலர்ட், USB போர்ட், மொபைல் ஆப் கனெக்ட்டிவிட்டி ஆகிய வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

    ரூ.1.86 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டிருக்கிறது ஓக்கினாவாவின் இந்த புதிய OKHi-90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    கராச்சியில் 4 நாட்களில் 26 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன நிலநடுக்கம்
    மொழி சர்ச்சையில் "எனக்கு ஆதரவாக நின்றதற்கு தமிழகத்திற்கு நன்றி": கமல்ஹாசன் கமல்ஹாசன்
    வரலாற்று சிறப்புமிக்க கத்ரா-ஸ்ரீநகர் ரயில் சேவையை பிரதமர் மோடி சனிக்கிழமை துவங்கி வைக்கிறார்  பிரதமர் மோடி
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றம்

    எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

    பிஎம்டபுள்யு சிஈ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் ஆட்டோமொபைல்
    இந்தியாவில் அதிகரிக்கும் EV மோகம்; ஒரு பார்வை எலக்ட்ரிக் வாகனங்கள்
    புதிய வண்ணங்களில் அறிமுகம் ஆகியுள்ளது ஓலா எஸ்1, எஸ்1 ப்ரோ 'கெருவா' எலக்ட்ரிக் வாகனங்கள்
    டிவிஎஸ் XLஐ பின்னுக்குத் தள்ள வரும் எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஆட்டோமொபைல்

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் வெளியானது 'மெக்லாரன் ஆர்தூரா' ஹைபிரிட் சூப்பர்கார்! கார்
    சன்ரூஃபுடன் கூடிய மஹிந்திரா 5 டோர் தார்.. எப்போது வெளியீடு? மஹிந்திரா
    எலெக்ட்ரிக் பைக்குகளின் விலையை ரூ.30,000 வரை உயர்த்திய மேட்டர் எனர்ஜி.. ஏன்? எலக்ட்ரிக் பைக்
    உற்பத்தி அளவை உயர்த்த திட்டமிடும் மஹிந்திரா.. ஏன்? மஹிந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025