LOADING...
புதிய அவதாரத்தில் கியா செல்டோஸ்! ₹10.99 லட்சம் விலையில் அறிமுகம்; மாற்றங்கள் என்னென்ன?
இரண்டாம் தலைமுறை கியா செல்டோஸ் இந்தியாவில் அறிமுகம்

புதிய அவதாரத்தில் கியா செல்டோஸ்! ₹10.99 லட்சம் விலையில் அறிமுகம்; மாற்றங்கள் என்னென்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Jan 02, 2026
11:36 am

செய்தி முன்னோட்டம்

கியா இந்தியா நிறுவனம் தனது மிகவும் பிரபலமான மிட்சைஸ் எஸ்யூவி (Midsize SUV) காரான செல்டோஸின் இரண்டாம் தலைமுறை மாடலை இன்று (ஜனவரி 2) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ₹10.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய செல்டோஸ் முந்தைய மாடலை விடப் பெரியதாகவும், அதிக பிரீமியம் வசதிகளுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 4,460 மிமீ ஆகவும், அகலம் 1,830 மிமீ ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீல்பேஸ் 2,690 மிமீ ஆக உயர்ந்துள்ளதால், உட்புறத்தில் அதிக இடம் கிடைக்கிறது. கியாவின் புதிய 'டிஜிட்டல் டைகர் ஃபேஸ்' வடிவமைப்பு, ஐஸ் கியூப் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் ஸ்டார் மேப் எல்இடி டிஆர்எல்கள் இதற்குக் கூடுதல் பொலிவைத் தருகின்றன.

உட்புற வடிவமைப்பு

தொழில்நுட்பம் நிறைந்த உட்புறம்

காரின் உட்புறம் நவீன வசதிகளுடன் ஒரு சொகுசு அறையைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. 30 இன்ச் அளவுள்ள 'ட்ரினிட்டி பனோரமிக் டிஸ்ப்ளே' இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது 12.3 இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் 12.3 இன்ச் தொடுதிரை ஆகியவற்றை உள்ளடக்கியது. 10 வழிகளில் சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, காற்றோட்ட வசதி கொண்ட முன்பக்க இருக்கைகள், போஸ் நிறுவனத்தின் 8 ஸ்பீக்கர்கள் மற்றும் 64 வண்ணங்களில் ஒளிரும் ஆம்பியண்ட் லைட்டிங் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

என்ஜின்

என்ஜின் மற்றும் பாதுகாப்பு

பல்வேறு என்ஜின் விருப்பங்களில் இந்தப் புதிய செல்டோஸ் கிடைக்கிறது. பெட்ரோலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரு விருப்பங்கள் உள்ளன. மேலும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதிகளுடன் கிடைக்கிறது. 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இஎஸ்சி ஆகியவை அனைத்து வேரியண்ட்களிலும் வருகின்றன. உயர் மாடல்களில் லெவல் 2 ஏடிஏஎஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 18 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் வசதிகளும் இதில் உள்ளன. ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்ற கார்களுக்கு இந்த புதிய கியா செல்டோஸ் மிகப்பெரிய போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement