LOADING...
மிட்சுபிஷி பஜேரோ மீண்டும் வருகிறது! டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு டஃப் ஃபைட் கொடுக்குமா?
2026ஆம் ஆண்டின் இறுதியில் உலகளவில் அறிமுகமாகிறது புதிய மிட்சுபிஷி பஜேரோ எஸ்யூவி கார்

மிட்சுபிஷி பஜேரோ மீண்டும் வருகிறது! டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு டஃப் ஃபைட் கொடுக்குமா?

எழுதியவர் Sekar Chinnappan
May 30, 2026
06:49 pm

செய்தி முன்னோட்டம்

ஆட்டோமொபைல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புகழ்பெற்ற பஜேரோ எஸ்யூவி காரின் மறுவருகையை மிட்சுபிஷி நிறுவனம் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த புத்தம் புதிய எஸ்யூவி கார் வரும் 2026 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் உலகளாவிய ரீதியில் தனது அதிகாரப்பூர்வ அறிமுகத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்திய சந்தைக்கு இந்த கார் திரும்புவது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை என்றாலும், கார் பிரியர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பஜேரோ காரின் சிறப்பம்சங்கள்

புதிய மிட்சுபிஷி பஜேரோ காரில் எதிர்பார்க்கப்படும் அதிநவீன இன்ஜின் வசதிகள் மற்றும் ரெட்ரோ டிசைன்

புதிய பஜேரோ கார் ட்ரைடன் பிக்கப் ட்ரக்கின் ஹெவி-டியூட்டி லேடர் ஃபிரேம் மற்றும் 2.4 லிட்டர் ட்வின்-டர்போ டீசல் இன்ஜின் வசதியைக் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது 201bhp ஆற்றலையும் 470Nm டார்க்கையும் வெளிப்படுத்துவதோடு, பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV) இன்ஜின் மற்றும் அதிநவீன ஃபோர்-வீல் டிரைவ் (4WD) தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இதன் வெளிப்புற வடிவமைப்பு டி-வடிவ எல்இடி விளக்குகளுடன், கம்பீரமான மற்றும் ரெட்ரோ மாடர்ன் (Retro Modern) தோற்றத்தில் மிக ஆக்ரோஷமாக இருக்கும் எனத் தெரிகிறது.

ஃபார்ச்சூனர் காரின் போட்டி விபரம்

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் ஏகபோக ஆதிக்கத்திற்குப் புதிய பஜேரோ சவாலாக அமையுமா?

கடுமையான உமிழ்வு விதிகள் மற்றும் டீலர்ஷிப் பற்றாக்குறை காரணமாக 2020களின் தொடக்கத்தில் இந்திய சந்தையில் இருந்து பஜேரோ கார் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த கார் மீண்டும் இந்தியாவிற்கு வரும் பட்சத்தில், சந்தையில் அசைக்க முடியாத ராஜாவாக இருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு இது நேரடிப் போட்டியாக மாறும். பாடி-ஆன்-பிரேம் (Body-on-frame) அமைப்பில் கரடுமுரடான எஸ்யூவி காரை வாங்க நினைக்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு, இது மீண்டும் ஒரு மிகச்சிறந்த மாற்றாக அமையும்.

Advertisement