2024ல் உலகளவில் தங்கள் கார் லைன்அப்பை ரீவேம்ப் செய்யும் எம்ஜி மோட்டார்
2024ம் ஆண்டு தொடக்கத்தில், தங்களுடைய கார் லைன்அப்பை மொத்தமாக சீரமைக்கத் திட்டமிட்டிருக்கிறது பிரிட்டனைச் எம்ஜி மோட்டார். சீனாவைச் சேர்ந்த SAIC ஆட்டோமொபைல் நிறுவனத்தை தாய் நிறுவனமாகக் கொண்ட எம்ஜி மோட்டார் நிறுவனமானது, புதிய ப்ளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஒன்றையும், அப்டேட் செய்யப்பட்ட தங்களுடைய எம்ஜி 4 எலெக்ட்ரிக் காரையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. இது தவிர, தங்களுடைய 3, 5 மற்றும் ZS ஆகிய மாடல்களையும் அப்டேட் எம் அப்டேட் செய்யவிருப்பதாக, அந்நிறுவனத்தின் பொது மேலாளர் லா ஜியாஜூன் தெரிவித்துள்ளார். மேலும், உலகின் பல்வேறு ஆட்டோமொபைல் சந்தைகளில் எரிபொருள் வாகனங்களே முதல் தேர்வாக இருப்பதனால், தற்போது எரிபொருள் கார் வணிகத்தைக் கைவிடும் எண்ணம் எம் மோட்டார் நிறுவனத்திற்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எம்ஜி மோட்டார் 2024 கார் லைன்அப்:
புதிய எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி, 2024ம் ஆண்டு எம்ஜி 3 மற்றும் எம்ஜி ZS மாடல்களின் அப்டேட்டட் வெர்ஷன்கள் உட்பட புதிய எரிபொருள் கார்களையும் அறிமுகப்படுத்த எம்ஜி திட்டமிட்டு வருகிறது எம்ஜி மோட்டார் நிறுவனம். அந்நிறுவனத்தின் 5 மற்றும் 7 கார் மாடல்கள் விற்பனையில் இல்லாத சில ஆட்டோமொபைல் சந்தைகளிலும், அதன் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன்களை வெளியிட எம்ஜி திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், தற்போது உலகளவில் விற்பனையில் இருக்கும் மார்வெல் R மாடலின் அப்டேட்டட் வெர்ஷனாக புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி ஒன்றையும் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தவிருக்கிறது எம்ஜி. இந்த மாடலை SAIC நிறுவனத்தின் மாடுலார் ஸ்கேலபிள் பிளாட்ஃபார்மில் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறது எம்ஜி மோட்டார்.