ரூ.5.9 கோடி விலைக்கு இந்தியாவில் வெளியானது மெக்லாரன் 750S
புகழ்பெற்ற பிரிட்டிஷ் சூப்பர் கார் தயாரிப்பாளரான மெக்லாரன், அதன் மிக சக்திவாய்ந்த மாடலான 750Sஐ இந்தியாவில் ரூ. 5.91 கோடிக்கு(எக்ஸ்-ஷோரூம்) வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2023 இல் உலகளவில் அறிமுகமான இந்த வாகனம், கூபே மற்றும் ஹார்ட்டாப் கன்வர்டபுள் ஆகிய இரண்டு பதிப்புகளிலும் கிடைக்கிறது. மெக்லாரன் 720S மாடலின் மேம்படுத்தப்பட்ட வகை கார் இதுவாகும். புதுப்பிக்கப்பட்ட முன் பம்பர், நேர்த்தியான எல்இடி ஹெட்லைட்கள், ஒரு பெரிய ஏர் ஸ்ப்ளிட்டர், நீட்டிக்கப்பட்ட பின் தளம் மற்றும் பின்புறத்தில் ஒரு பெரிய ஆக்டிவ் விங் ஆகியவற்றுடன் 750S மாடல் அதன் முன்னோடியான 720Sயில் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.
4.0 லிட்டர் V8 பெட்ரோல் எஞ்சினிலிருந்து ஆற்றலைப் பெறும் 750S
மெக்லாரன் 750Sஸின் சக்திவாய்ந்த 4.0-லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு, V8 பெட்ரோல் எஞ்சினுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 740hp அதிகபட்ச ஆற்றலையும் 800Nm உச்ச முறுக்குவிசையையும் வெளிப்படுத்த வல்லது. காரின் பின்புற சக்கரங்களுக்கு சக்தியை மாற்றுவதற்கு ஏற்ற திறன் கொண்ட பவர்டிரெய்ன் ஏழு வேக தானியங்கி கியர்பாக்ஸ் மெக்லாரன் 750Sஇல் இருப்பது அதன் இன்னொரு முக்கிய அம்சமாகும். 331km/h அதிகபட்ச வேகத்தில் பயணிக்கும் இந்த காரின் அக்ஸ்ப்லெரேஷன் நேரம் 0-100km/h ஆகும். அதாவது, வெறும் 2.9 வினாடிகளில் 0-100km/h வேகத்திற்கு இதில் அக்ஸ்ப்லெரேட்டர் கொடுக்க முடியும். மேலும், இந்த காரில் வயர்லெஸ் சார்ஜர், 360-டிகிரி-வியூ கேமரா அமைப்பு, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் போவர்ஸ் மற்றும் வில்கின்ஸ் வழங்கும் பிரீமியம் ஆடியோ சிஸ்டம் ஆகியவை உள்ளன.