NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ஜூலையில் வெளியாகவிருக்கும் மாருதியின் புதிய MPV.. என்ன கார் என்று தெரியுமா? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜூலையில் வெளியாகவிருக்கும் மாருதியின் புதிய MPV.. என்ன கார் என்று தெரியுமா? 
    மாருதியின் புதிய எம்பிவி

    ஜூலையில் வெளியாகவிருக்கும் மாருதியின் புதிய MPV.. என்ன கார் என்று தெரியுமா? 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 27, 2023
    05:07 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய எம்பிவி ஒன்றை அறிமுகப்படுத்தவிருப்பதாக கடந்த ஆண்டே தெரிவித்திருந்தது மாருதி சுஸூகி. அந்த புதிய மாடலை வரும் ஜூலையில் அறிமுகம் செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    டொயோட்டா இன்னோவா ஹைகிராஸை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய மாடலானது டொயோட்டாவின் பிடாடி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு மாருதிக்கு சப்ளை செய்யப்படவிருக்கிறது.

    2022-2023 நிதியாண்டின் இறுதியில் புதிய எம்பிவி ஒன்றை தயாரித்து, அதனை மாருதியுடனும் பகிர்ந்து கொள்ளவிருப்பதாக கடந்த ஆண்டே குறிப்பிட்டிருந்தது டொயோட்டா. அதனையே வரும் ஜூலையில் வெளியிடவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது மாருதி.

    முன்னர மாருதியின் மாடல்களையே டொயோட்டா தங்கள் பெயரில் மறுசீரமைத்து வெளியிட்டு வந்த நிலையில், டொயோட்டாவின் கார் மாடல் ஒன்றை தன்னுடைய பெயரில் மறுசீரமைத்து மாருதி வெளியிடுவது இதுவே முதல் முறை.

    ஆட்டோ

    என்ன எதிர்பார்க்கலாம்? 

    டொயோட்டாவின் மாடல் தான் என்றாலும், தனக்கே உரிய ஸ்டைலிங் மாற்றங்களை மாருதி செய்யத் தவறாது.

    முக்கியமாக கிரில், முகப்பு விளக்குகள், பின்பக்க விளக்குகள் மற்றும் பம்பர் ஆகியவற்றில் டிசைன் மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

    ஹைரடர் மற்றும் கிராண்டு விட்டாரா மாடல்களில் உள்பக்கங்களைப் போலவே இதன் உள்பக்கங்களையும், மாருதி மாற்றியமைக்கலாம் எனத் தெரிகிறது.

    இன்னோவா ஹைகிராஸில் பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின்களே மாருதியின் புதிய எம்பிவியிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், இந்த புதிய எம்பிவி தான் மாருதியின் லைன்-அப்பிலேயே மிகவும் விலையுயர்ந்த மாடலாக இருக்குமாம். எனவே, இதனை தங்களது ஃப்ளாக்ஷிப் காராக நெக்ஸா டீலர்ஷிப்களின் மூலம் விற்பனை செய்யவிருக்கிறது மாருதி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாருதி
    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    புதிய கார்

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    மாருதி

    புதிய மைல் கல்லை எட்டிய மாருதி சுசிகி! கடந்து வந்த பாதை ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    டாடா நிறுவனத்தை கவிழ்க்க அடுத்தடுத்து 6 எலெக்ட்ரிக் கார்களை வெளியிடும் மாருதி சுஸுகி! வாகனம்
    லிட்டருக்கு 32கிமீ மைலேஜ் தரும் மாருதி சுசுகியின் Dzire Tour S அறிமுகம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல் கார்

    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    40 வருட நினைவாக மாருதி சுசுகி செலேரியோ ப்ளாக் எடிஷன் அறிமுகம்! மாருதி
    விமான பிரீமியம் எகானமி - வாடிக்கையாளர்களுக்கு ஏர் இந்தியா அசத்தல் அறிவிப்பு! ஏர் இந்தியா
    2023-இல் வெளியாகும் மாருதி மற்றும் ஹூண்டாய் டாடா கார்கள்! கார் உரிமையாளர்கள்
    விபத்துக்களை ஏற்படுத்தும் வாடகை இ-ஸ்கூட்டர்கள் - தடைவிதிக்க பாரிஸ் வாக்களிப்பு! எலக்ட்ரிக் வாகனங்கள்

    புதிய கார்

    நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷனை வெளியிட்டது டாடா  டாடா மோட்டார்ஸ்
    ரோல்ஸ் ராய்ஸ் உருவாக்கிய பிரத்தியேகமான 'கோஸ்ட்' மாடல் கார்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?  கார்
    இந்தியாவில் தங்களது புதிய 'காமெட் EV'-யை அறிமுகப்படுத்தியது எம்ஜி மோட்டார்!  எம்ஜி மோட்டார்
    லம்போர்கினியின் புதிய ரெவால்டோ ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்.. என்ன ஸ்பெஷல்?  லம்போர்கினி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025