NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / வேகன்ஆர் வால்ட்ஸ் லிமிடெட் எடிஷனை ரூ.6 லட்சத்திற்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்தது மாருதி சுசுகி
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேகன்ஆர் வால்ட்ஸ் லிமிடெட் எடிஷனை ரூ.6 லட்சத்திற்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்தது மாருதி சுசுகி
    ரூ.6 லட்சத்திற்கும் குறைவான விலையில் ஹேட்ச்பேக் மாடலை வெளியிட்டது மாருதி சுசுகி

    வேகன்ஆர் வால்ட்ஸ் லிமிடெட் எடிஷனை ரூ.6 லட்சத்திற்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்தது மாருதி சுசுகி

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 20, 2024
    04:57 pm

    செய்தி முன்னோட்டம்

    மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் இன்று (செப்டம்பர் 20) வேகன்ஆர் வால்ட்ஸ் லிமிடெட் எடிஷனை ரூ.5.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

    இது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் விருப்பங்களில் LXi, VXi மற்றும் ZXi வகைகளில் கிடைக்கிறது.

    இந்தியாவில் இதுவரை மாருதியின் மிகப்பெரிய விற்பனையான கார்களில் வேகன்ஆர் ஒன்றாகும்.

    இது 1999 இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 32,50,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது.

    தற்போது, ​​இது நடுத்தர-ஹேட்ச்பேக் பிரிவில் 64%க்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது.

    வேகன்ஆர் வால்ட்ஸ் லிமிடெட் எடிஷன், ஃபாக் லேம்ப்கள், வீல்-ஆர்ச் கிளாடிங், பம்பர் ப்ரொடக்டர்கள், சைட் ஸ்கர்ட்ஸ், பாடி சைடு மோல்டிங் மற்றும் முன் குரோம் கிரில் போன்ற வெளிப்புற கூறுகளுடன் வருகிறது.

    சிறப்பம்சங்கள்

    வேகன்ஆர் வால்ட்ஸ் லிமிடெட் எடிஷனின் சிறப்பம்சங்கள்

    ஒரு புதிய உட்புற ஸ்டைலிங் கிட் மற்றும் டிசைனர் தரை விரிப்புகள் உள்ளன. கூடுதலாக, இந்த காரில் தொடுதிரை இசை அமைப்பு, பாதுகாப்பு அமைப்பு மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளது.

    பாதுகாப்பு அம்சங்களில் டூயல் ஏர்பேக்குகள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் விநியோகம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில்-ஹோல்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    மொத்தத்தில், இந்த காரில் 12க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த வாகனத்தில் 1.0-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2-லிட்டர் பெட்ரோல் என இரண்டு கே-சீரிஸ் என்ஜின் விருப்பங்கள் உள்ளன.

    ஐடில் ஸ்டார்ட் ஸ்டாப் (ஐஎஸ்எஸ்) தொழில்நுட்பங்களுடன் டூயல் ஜெட், டூயல் விவிடி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இரண்டு யூனிட்களிலும் பெட்ரோலில் எம்டி மற்றும் ஏஎம்டி விருப்பங்கள் உள்ளன.

    மைலேஜ்

    வேகன்ஆர் வால்ட்ஸ் லிமிடெட் எடிஷனின் மைலேஜ்

    வேகன்ஆர் வால்ட்ஸ் லிமிடெட் எடிஷன் கார் 1.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் சிஎன்ஜி விருப்பத்தைப் பெறுகிறது.

    வேகன்ஆர் வால்ட்ஸ் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 25.19 கிமீ மைலேஜையும், வேகன்ஆர் வால்ட்ஸ் சிஎன்ஜி மாடல் 33.48 கிமீ மைலேஜையும் வழங்குகிறது.

    மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலானது 2012 இல் முதல் 1 மில்லியன் விற்பனையையும், 2017 இல் 2 மில்லியன் விற்பனை மைல்ஸ்டோனையும் எட்டியது.

    இது 2023 இல் 3 மில்லியன் விற்பனை மைல்ஸ்டோனை எட்டியது.

    2023-24 நிதியாண்டில் நடுத்தர ஹேட்ச்பேக் பிரிவில் வேகன்ஆர் 61% சந்தைப் பங்கைப் பெற்றிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 64% ஆக சந்தைப் பங்கு வளர்ந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாருதி
    கார்
    ஹேட்ச்பேக்
    இந்தியா

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    மாருதி

    சலுகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸூகி ஜிம்னி ஆட்டோமொபைல்
    ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் அறிமுகமானது மாருதி சுஸூகியின் 'நான்காம் தலைமுறை ஸ்விப்ட்' ஹேட்ச்பேக்
    நான்காம் தலைமுறை ஸ்விப்ட் மாடலை இந்திய சாலைகளில் சோதனை செய்து வரும் மாருதி சுஸூகி ஹேட்ச்பேக்
    'eVX' கான்செப்ட் எலெக்ட்ரிக் காரின் தயாரிப்பு வடிவத்தை சோதனை செய்து வரும் மாருதி? எலக்ட்ரிக் கார்

    கார்

    இந்த மாதம் மாருதி சுஸுகி கார்களுக்கு ₹74,000 வரை தள்ளுபடி மாருதி
    புதிய எரிபொருள் திறன் விதிமுறைகளால் இந்தியாவில் கார்களின் விலை உயரலாம்  இந்தியா
    புகாட்டியின் Chironக்கு மாற்றாக 1,800hp பிளக்-இன் ஹைப்ரிட் Tourbillon வெளியானது கார் கலக்ஷன்
    அமேஸ், சிட்டி மற்றும் எலிவேட் கார்களுக்கான சிஎன்ஜி விருப்பங்களை அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா

    ஹேட்ச்பேக்

    இந்தியாவில் மாருதியின் அடுத்த லைன்-அப் என்ன? மாருதி
    பெலினோ ஹேட்பேக்கில் கூடுதல் வசதிகளை கூடுதல் கட்டணத்தில் வழங்கும் மாருதி சுஸூகி மாருதி
    இந்தியாவில் வெளியானது ஹூண்டாயின் 'i20 N லைன் ஃபேஸ்லிஃப்ட்' மாடல் ஹூண்டாய்

    இந்தியா

    திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவால்
    வெளிநாட்டு வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு; பின்னணி என்ன? மத்திய அரசு
    விதிகளை மீறிய NBFC நிறுவனங்களுக்கு ரூ.23 லட்சம் அபராதம்; ஆர்பிஐ அதிரடி உத்தரவு ஆர்பிஐ
    திராவிட உடன்பிறப்புகளுக்கு ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓணம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025