இந்தியாவில் வெளியானது 'மாருதி சுஸூகி ஜிம்னி'.. விலை என்ன?
செய்தி முன்னோட்டம்
நீண்ட காத்திருப்புக்கு பிறகு இறுதியாக இன்று இந்தியாவில் வெளியாகியிருக்கிறது மாருதி சுஸூகியின் 5 டோர் ஜிம்னி.
7 நிறங்களில், ஸெட்ட மற்றும் ஆல்ஃபா என இரண்டு வேரியன்ட்களாக வெளியாகியிருக்கிறது புதிய 5 டோர் எஸ்யூவி. இந்த புதிய ஆஃப்ரோடு எஸ்யூவிக்கான புக்கிங்குகள் கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவின் போதே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜிம்னியில் 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹார்டு டாப், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகிய அம்சங்களை வழங்கியிருக்கிறது மாருதி.
இந்தியாவில் 5 டோர் ஃபோர்ஸ் கூர்க்கா, அடுத்து வெளியாகவிருக்கும் 5 டோர் மஹிந்திரா தார் ஆகிய கார்களுக்குப் போட்டியாக வெளியாகியிருக்கிறது இந்த மாருதி சுஸூகி ஜிம்னி.
மாருதி சுஸூகி
இன்ஜின் மற்றும் விலை:
இந்த ஜிம்னியில் 103hp பவர் மற்றும் 134Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, நான்கு சிலிண்டர்கள் கொண்ட, மாருதியின் 1.5 லிட்டர் K15B பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த இன்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு டார்க் கண்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆகிய ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இதன் தொடக்க நிலை மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ஸெட்டா வேரியன்ட்டானது ரூ.12.74 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து டாப் எண்டான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் டூயல் டோர் கலர் ஆப்ஷன் கொண்ட ஆல்ஃபா வேரியன்டிற்கு ரூ.15.05 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையாக நிர்ணயம் செய்திருக்கிறது மாருதி.
டூயல்டோன் இல்லாத ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஆல்ஃபா வேரியன்டிற்கு ரூ.14.89 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.