Loading...
கார் வாங்கப் போறீங்களா? ஆகஸ்ட் 1 முதல் மாருதி கார்களின் விலை உயர்கிறது
ஆகஸ்ட் 1 முதல் மாருதி கார்களின் விலை உயர்கிறது

கார் வாங்கப் போறீங்களா? ஆகஸ்ட் 1 முதல் மாருதி கார்களின் விலை உயர்கிறது

எழுதியவர் Venkatalakshmi V
Jul 22, 2026
05:43 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, தனது அனைத்து முன்னணி கார் மாடல்களின் விலையையும் ஆகஸ்ட் 2026 முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. வாகனங்களின் உற்பத்திச் செலவு மற்றும் மூலப்பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதன் காரணமாகவே இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 30,000 வரை உயரும். அதிகரிக்கும் உதிரி பாகங்கள், உலோகம் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக காரின் விலை உயர்வதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் இந்த ஆண்டில் மேற்கொள்ளும் இரண்டாவது தொடர் விலை உயர்வு இதுவாகும் (முன்னதாக மே மற்றும் ஜூன் மாதங்களிலும் விலை மாற்றங்கள் செய்யப்பட்டன).

விவரங்கள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

நீங்கள் ஏற்கனவே ஒரு மாருதி காரை முன்பதிவு செய்திருந்தாலும், வாகனம் டெலிவரி எடுக்கப்படும் நாளில் உள்ள விலையே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

வாடிக்கையாளர்கள் ஜூலை மாத இறுதிக்குள் காரை இன்வாய்ஸ் செய்து கொண்டால், இந்த புதிய விலை உயர்வில் இருந்து தப்பிக்க முடியும்.

எனவே, ஆகஸ்ட் மாத விலை உயர்வால் கூடுதல் செலவைத் தவிர்க்க விரும்புபவர்கள், ஜூலை 31-க்குள் காரை இன்வாய்ஸ் செய்து டெலிவரி பெற உங்கள் ஷோரூம் டீலர்களைத் தொடர்பு கொள்வது நல்லது.

ADVERTISEMENT