Loading...
ஆகஸ்ட் 2026இல் 35% வரை பாய்ந்த மாருதி சுஸுகி விற்பனை; மீண்டும் முதலிடம் பிடித்த வேகன் ஆர்
ஆகஸ்ட் 2026இல் 35% வரை பாய்ந்த மாருதி சுஸுகி விற்பனை

ஆகஸ்ட் 2026இல் 35% வரை பாய்ந்த மாருதி சுஸுகி விற்பனை; மீண்டும் முதலிடம் பிடித்த வேகன் ஆர்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 09, 2026
04:13 pm

செய்தி முன்னோட்டம்

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த ஆகஸ்ட் 2026-இல் உள்நாட்டு பயணிகள் வாகன விநியோகத்தில் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 35 சதவீத அபார வளர்ச்சிய பதிவு செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் மொத்தம் 1,76,971 வாகனங்களை விற்பனையாளர்களுக்கு விநியோகித்துள்ளது. இது கடந்த 2025 ஆகஸ்ட்டில் விநியோகிக்கப்பட்ட 1,31,278 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 35% அதிகம் ஆகும். இருப்பினும், ஜூலை 2026 மாதத்தின் (1,96,203 அலகுகள்) விநியோகத்துடன் ஒப்பிடும்போது இது 10% சரிவாகும்.

விற்பனை

விற்பனையில் முதலிடம் பிடித்த மாடல்கள்

ஆகஸ்ட் மாத விற்பனையில் 20,180 அலகுகளுடன் Wagon R மாடல் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஸ்விஃப்ட்: 19,832 அலகுகளுடன் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது (60% ஆண்டு வளர்ச்சி).

ஃபிரான்க்ஸ்: 18,730 அலகுகளுடன் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது (51% ஆண்டு வளர்ச்சி).

எர்டிகா & டிசையர்: எர்டிகா 18,516 அலகுகளும், டிசையர் 18,418 அலகுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வேகன் ஆர், ஸ்விஃப்ட், ஃபிரான்க்ஸ், எர்டிகா மற்றும் டிசையர் ஆகிய ஐந்து மாடல்கள் மட்டுமே மாருதி சுஸுகியின் மொத்த ஆகஸ்ட் மாத விநியோகத்தில் 54% பங்களிப்பைப் பெற்றுள்ளன.

மற்றவை

பிற முக்கிய கார்களின் நிலவரம்

Brezza காரின் விநியோகம் ஜூலை மாதத்தை விட 27% அதிகரித்து 15,288 அலகுகளாக பதிவாகியுள்ளது.

விட்கோரிஸ் 12,978 அலகுகளும், பலேனோ 15,746 அலகுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

செலரியோ மாடல் கடந்த ஆண்டை விட 99% அபார வளர்ச்சி கண்டு 2,990 அலகுகளைப் பதிவு செய்துள்ளது.

அல்டோ (8,692), கிராண்ட் விட்டாரா (7,808), இவிட்டாரா (1,586) மற்றும் ஜிம்னி (586) ஆகிய மாடல்களும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளன.

ADVERTISEMENT