அக்டோபர் கடைசி வாரத்தில் வெளியான டாப் 5 ஆட்டோமொபைல்கள்
அக்டோபர் கடைசி வாரத்தில் புகழ்பெற்ற பிராண்டுகளின் பல புதிய கார் மற்றும் பைக் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த அதிநவீன வாகனங்கள் சிறந்த செயல்திறன் மட்டுமின்றி புதுமையான வடிவமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளன. இந்த வாரத்தின் புதிய வாகன அறிமுகங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம். ரெனால்ட் கார்டியன் என்ற பெயரில் ஒரு சிறிய நகர்ப்புற வாகனத்தை வெளியிட்டது. இது வாகனத்தின் பாணி மற்றும் செயல்பாட்டை மறுவரையறை செய்கிறது. டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் மற்றும் 17-இன்ச் எட்ஜ்கள் மற்றும் மேம்பட்ட இ-ஷிஃப்டர் கியர் செலக்டர் உள்ளிட்ட பல்வேறு உயர்நிலை அம்சங்களை கொண்டுள்ள இது வாகன நெருக்கடி மிகுந்த நகர்ப்புற பயணத்தை எளிதாக்குகிறது.
பிஎம்டபிள்யூ எக்ஸ்4 எம்40ஐ
பிஎம்டபிள்யூ நிறுவனத்தால் லிமிடெட் எடிஷனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எக்ஸ்4 எம்40ஐ இந்திய சந்தையை பரபரப்பாக மாற்றியுள்ளது. ₹96.20 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த எஸ்யூவி கூபே மாடல் கார், 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. மேலும் இது 360 எச்பி திறன் மற்றும் 500 நியூட்டன் மீட்டர் டார்க்கை வழங்குகிறது. நேர்த்தியான வடிவமைப்புடன் கூடிய கருப்பு நிறத்துடன் வந்துள்ள எக்ஸ்4 எம்40ஐ ஆனது 0-100 கிலோமீட்டர் வேகத்திற்கு வெறும் 4.9 வினாடிகளில் அதிகரிக்கும் திறனைக் கொண்டது. மேலும், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர் ஆகும். லிமிடெட் எடிஷனாக வெளியிடப்பட்டுள்ள இது மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
டொயோட்டாவின் புதிய அறிமுகம்
டொயோட்டா நிறுவனம் அதன் மின்சார வாகன மாடல்களை அதிகரிக்கும் வகையில் ஒரு முக்கியமான படியை எடுத்துள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் பிரபலமான எஸ்யூவி மாடலான லேண்ட் குரூஸர் எஸ்இயின் எலக்ட்ரிக் மாடலை டொயோட்டா அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் உயர் திறன் வாய்ந்த டார்க் பவர் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு இதை மற்ற மாடல்களில் இருந்து தனித்து காட்டுகிறது. மேலும் இந்த கார் மூன்று வரிசை இருக்கைகளை கொண்டு ஒரு தனித்துவமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது. இதற்கிடையே, டொயோட்டாவின் நியோ ஸ்டீர் தானியங்கி ஓட்டுநர் வாகன தொழில்நுட்பத்தின் கான்செப்ட் குறித்த முன்னேற்றத்தையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
டுகாட்டியின் மல்டிஸ்ட்ராடா வி4 ஆர்எஸ்
இருசக்கர பிரீமியம் வாகன சந்தையில் செயல்படும் டுகாட்டி நிருவனம், மல்டிஸ்ட்ராடா வி4 ஆர்எஸ் வெளியிடப்பட்ட நிலையில், அதை டுகாட்டி ஆர்வலர்கள் அதிக அளவில் கொண்டாடி வருகின்றனர். இந்த குறிப்பிடத்தக்க பைக்கில் டுகாட்டியின் Panigale V4 மற்றும் ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4 மாடல்களில் இருந்து பெறப்பட்ட சக்திவாய்ந்த 1,103 சிசி என்ஜின் 180 எச்பி பவர் மற்றும் 118 நியூட்டன் மீட்டர் டார்க்கை வழங்குகிறது. திரவ-குளிரூட்டப்பட்ட, 90-டிகிரி V4 என்ஜின், மல்டிஸ்ட்ராடா வி4 ஆர்எஸ்ஸை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறது. இது அதன் முன்னோடிகளை விஞ்சி ஒரு புதிய அளவுகோலை அமைக்கிறது.
ஸ்விஃப்ட் கான்செப்டை வெளியிட்ட சுஸுகி
டோக்கியோ மோட்டார் ஷோவில் புதிய ஸ்விஃப்ட் கான்செப்ட்டை வெளியிட்டதன் மூலம் சுஸுகி நிறுவனம் இந்த வாரத்தில் எதிர்காலத்திற்கான ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் இந்திய அறிமுகத்திற்காக எதிர்பார்க்கப்படும் இந்த நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட், மிதக்கும் மேற்கூரை வடிவமைப்பு, புதுப்பிக்கப்பட்ட கிரில் மற்றும் மேம்பட்ட எல்இடி விளக்குகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு அற்புதமான வடிவமைப்பு பரிணாமத்தைக் காட்டுகிறது. ஹைபிரிட் பவர்டிரெய்ன் மற்றும் மேம்பட்ட டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் அம்சங்களுடன், புதிய ஸ்விஃப்ட் கான்செப்ட் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ஓட்டுநர் அனுபவத்தை உறுதியளிக்கிறது.