Page Loader
உற்பத்தி அளவை உயர்த்த திட்டமிடும் மஹிந்திரா.. ஏன்?
உற்பத்தி அளவை உயர்த்த திட்டமிடும் மஹிந்திரா

உற்பத்தி அளவை உயர்த்த திட்டமிடும் மஹிந்திரா.. ஏன்?

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 01, 2023
11:31 am

செய்தி முன்னோட்டம்

மஹிந்திரா காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தற்போது அதனை மாற்றி வேறு நிறுவனங்களின் கார் மாடல்களை பரிசீலித்து வருகிறார்கள். காரணம், அந்நிறுவனத்தின் கார்களுக்கு இருக்கும் அதீத காத்திருப்புக் காலம் தான். மஹிந்திராவிந் ஸ்கார்பியோ N மற்றும் XUV700 ஆகிய மாடல்களை நீங்கள் இப்போது புக் செய்தால், 2024-ல் தான் டெலிவரி கிடைக்கும். அதுவும் ரியர் வீல் ட்ரைவ் மாடல்களுக்கு ஒரு வருடம் வரை நாம் காத்திருக்க வேண்டும். தற்போதே 2 லட்சம் கார்கள் புக் செய்யப்பட்டு, அதனை விரைவில் டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மஹிந்திரா. ஆனால், மஹிந்திராவின் மாதாந்திர உற்பத்தி அளவோ வெறும் 39,000 தான். அதிலும், தற்போது ஒவ்வொரு மாதமும் 34,000 கார்களே உற்பத்தி செய்யப்படுவதாக அந்நிறுவனமே தெரிவித்திருக்கிறது.

மஹிந்திரா

காத்திருப்பு காலத்தை குறைக்க திட்டமிடும் மஹிந்திரா: 

டாடா நிறுவனம் மாதத்திற்கு 50,000 கார்களை தற்போது உற்பத்தி செய்து வருகிறது, ஹூண்டாயோ சராசரியாக 70,000 கார்களை உற்பத்தி செய்து வருகிறது. எனவே, தாங்களும் உற்பத்தி அளவை உயர்த்தவிருப்பதாக தெரிவித்திருக்கிறது மஹிந்திரா. சமீபத்தில் நடைபெற்று முடிந்த அந்நிறுவனத்தின் முதலீட்டாளர் சந்திப்பையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வரவில்லை என்றாலும், இந்த ஆண்டு முடிவிற்குள் மாதத்திற்கு 49,000 கார்கள் உற்பத்தி என்ற இலக்கை எட்ட விரும்புகிறோம் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். அதிக ஆர்டர்கள் நிலுவயில் இருப்பதாலும், உற்பத்தி அளவு குறைவாக இருப்பதாலும், புதிய வெளியீடுகள் அனைத்தையும் அடுத்த வருடத்திற்கு அந்நிறுவனம் தள்ளி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.