அடுத்த செய்திக் கட்டுரை

எலக்ட்ரிக் வாகனம் சரியில்லை! சர்ச்சையை கிளப்பிய தோனி
எழுதியவர்
Siranjeevi
Mar 15, 2023
06:48 pm
செய்தி முன்னோட்டம்
எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி எலக்ட்ரிக் வாகனம் குறித்து குற்றம் சாட்டியது வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில், தோனி பேசியதில், எலக்ட்ரிக் வாகனங்கள் கார்பன் எமிஷன்களையும், கார்பன் ஃபூட் பிரிண்ட்களையும் குறைக்கும் எனக் கூறுகின்றனர்.
ஆனால், எலக்டரிக் வாகனங்களால் முழுமையாக அதைச் செய்ய முடியும் என நம்ப முடியவில்லை. எலக்ட்ரிக் வாகனங்கள் மின்சக்தியில் இயங்குகிறது.
மேலும், மின்சக்தியானது தெர்மல் பவர் பிளான்ட் மூலம் மின் சக்தி தயாரானால் அதிலிருந்தும் மாசு வெளியாகத்தான் செய்யும் அதன்பின் இதை எப்படி பசுமை வாகனங்கள் என நாம் கூற முடியும் என கூறியிருந்தார். இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.