முழுமையற்ற KYC கொண்ட FASTagகள் ஜனவரி 31, 2024க்கு பிறகு செயலிழக்கும்: NHAI
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசுக்குச் சொந்தமான NHAI, முழுமையற்ற KYC கொண்ட FASTagகள் ஜனவரி 31, 2024க்குப் பிறகு வங்கிகளால் செயலிழக்கச் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
எலக்ட்ரானிக் டோல் வசூல் அமைப்பின் செயல்திறனை அதிகரிக்கவும், சுங்கச்சாவடிகளில் தடையற்ற இயக்கத்தை வழங்கவும், NHAI ஆனது 'ஒரு வாகனம், ஒரு FASTag' முயற்சியை எடுத்துள்ளது.
இது பல வாகனங்களுக்கு ஒற்றை FASTag ஐப் பயன்படுத்துவதையும், ஒரு குறிப்பிட்ட வாகனத்துடன் பல FASTagகளை இணைப்பதையும் தடுக்கும் என அதிகாரப்பூர்வ அறிக்கை கூறியது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) FASTag பயனர்களை RBI வழிகாட்டுதல்களின்படி, அவர்களின் FASTag இணைக்கப்பட்டுள்ள வங்கிகணக்கின் KYC முழுமையாக நிறைவு செய்யபட வேண்டும் என்பதை கட்டாயமாகியுள்ளது.
FASTag
FASTagக்காக உங்கள் KYC ஐ புதுப்பிப்பதற்கான வழிமுறைகள்:
அதிகாரப்பூர்வ FASTag இணையதளத்தை fastag.ihmcl.com பார்வையிடவும்.
உங்கள் மொபைல் எண் மற்றும் உங்கள் மொபைலில் பெறப்பட்ட OTP ஐப் பயன்படுத்தி உள்நுழையவும்.
முகப்புப் பக்கத்தில் உள்ள "எனது சுயவிவரம்" பகுதிக்குச் சென்று KYC லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.
தேவையான அனைத்து விவரங்களையும் அளித்து submit பட்டனை கிளிக் செய்யவும்.
KYCக்கு தேவைப்படும் ஆவணங்கள்: FASTag KYC க்கு வாகனப் பதிவுச் சான்றிதழ், அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்கள் தேவைப்படும்.