கியா எம்பிவி மாடலான கேரன்ஸ் இந்தியாவில் 2 லட்சம் விற்பனையைத் தாண்டி சாதனை
செய்தி முன்னோட்டம்
கியா இந்தியா தனது எம்பிவி காரான கியா கேரன்ஸ் உடன் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 2,00,000 யூனிட் விற்பனையைத் தாண்டியுள்ளது.
கேரன்ஸ் அதன் பிரிவில் வேகமாக விற்பனையாகும் வாகனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இது இந்திய சந்தையில் கியாவின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.
கியா இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் சீனியர் துணைத் தலைவர் ஹர்தீப் சிங் பிரார், தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, கேரன்ஸ் வெற்றி பிராண்டின் புதுமை மற்றும் இந்திய குடும்பங்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
அதன் மேம்பட்ட அம்சங்கள், விசாலமான உட்புறங்கள் மற்றும் வலுவான பாதுகாப்பு சான்றுகள் மக்கள் அதை விரும்புவதற்கான முக்கிய காரணிகளாக அவர் குறிப்பிட்டார்.
விபரங்கள்
கேரன்ஸ் மாடலின் விற்பனை விபரங்கள்
மொத்த கேரன்ஸ் விற்பனையில் பெட்ரோல் வகைகள் 58% ஆகவும், டீசல் மாடல்கள் 42% ஆகவும் உள்ளன என்பதை கியா வெளிப்படுத்தியுள்ளது.
கூடுதலாக, ஆட்டோமேட்டிக் (AT) மற்றும் இன்டெலிஜென்ட் (iMT) வேரியண்ட் விற்பனையில் 32% பங்களிக்கின்றன. 28% வாடிக்கையாளர்கள் சன்ரூஃப் பொருத்தப்பட்ட வேரியண்டை தேர்வு செய்கிறார்கள்.
கியா கேரன்ஸில் 1.5 லிட்டர் T-GDi பெட்ரோல் (160 எச்பி), 1.5 லிட்டர் பெட்ரோல் (115 எச்பி), மற்றும் 1.5 லிட்டர் CRDi டீசல் (116 எச்பி) என மூன்று என்ஜின் வகைகளில் வழங்கப்படுகின்றன.
எம்பிவி விலை ₹10.60 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இந்நிலையில், கியா கேரன்ஸுக்கு 2025 அப்டேட்டையும், மின்சார வாகன கேரன்ஸ் மாடலையும் தயாரித்து வருகிறது.