
43 லட்சம் வாகனங்கள்; பயணிகள் வாகன விற்பனையில் புதிய உச்சம் தொட்ட இந்திய ஆட்டோமொபைல் சந்தை
செய்தி முன்னோட்டம்
இந்திய ஆட்டோமொபைல் துறை மார்ச் 2025 இல் முடிவடைந்த நிதியாண்டில் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.
2024-25 நிதியாண்டில் பயணிகள் வாகன (PV) விற்பனை இதுவரை இல்லாத வகையில் 43 லட்சம் யூனிட்கள் என்ற அளவிற்கு உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
மேலும், இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) தெரிவித்துள்ளது.
இதில் பயன்பாட்டு வாகனங்கள் (UVகள்) முதன்மை வளர்ச்சி இயக்கிகளாக இருந்தன.
மொத்த பயணிகள் வாகன விற்பனையில் 65 சதவீத பங்களிப்பை இது அளித்துள்ளது. மேலும், இது முந்தைய நிதியாண்டில் 60 சதவீதமாக இருந்தது.
ஏற்றுமதி
ஏற்றுமதியில் சாதனை
பயணிகள் வாகன ஏற்றுமதியும் சாதனை எண்ணிக்கையைக் கண்டது. இது 14.6 சதவீதம் அதிகரித்து 7.7 லட்ச யூனிட்களாக இருந்தது.
இரு சக்கர வாகன விற்பனை 9.1 சதவீத வளர்ச்சியுடன் மீண்டும் உயர்ந்து, மொத்தம் 1.96 கோடி யூனிட்டுகளாக உயர்ந்தது.
மூன்று சக்கர வாகன விற்பனை 7.4 லட்சம் யூனிட்டுகளாக சாதனை அளவை எட்டியது. இது 6.7 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது மற்றும் நிதியாண்டு 19 இலிருந்து முந்தைய உச்சத்தை விட அதிகமாகும்.
ஒட்டுமொத்தமாக, உள்நாட்டு ஆட்டோமொபைல் சந்தை 7.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது, அதே நேரத்தில் பல்வேறு பிரிவுகளில் வாகன ஏற்றுமதி நிதியாண்டு 25 இல் 19.2 சதவீதம் அதிகரித்துள்ளது.