4 புதிய SUV மாடல்களை களமிறக்க இருக்கும் ஹூண்டாய்
புதுப்பிக்கப்பட்ட CRETA அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் நான்கு புதிய SUVகளை அறிமுகப்படுத்த ஹூண்டாய் தயாராகி வருகிறது. ALCAZAR (ஃபேஸ்லிஃப்ட்), TUCSON (ஃபேஸ்லிஃப்ட்), புதிய தலைமுறை ஹூண்டாய் KONA EV மற்றும் அனைத்து புதிய CRETA EV ஆகிய மடல்களை இந்த வருடம் ஹூண்டாய் களமிறக்க உள்ளது. வரவிருக்கும் மாடல்களின் உதவியுடன் இந்திய சந்தையில் இரண்டாவது இடத்தை மீண்டும் பிடிக்க ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது உருவாக்கத்தில் உள்ள ஹூண்டாய் ALCAZAR (ஃபேஸ்லிஃப்ட்) புத்தம்புதிய வெளிப்புற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்றும், புதுப்பிக்கப்பட்ட CRETA காரின் வடிவமைப்பை இது ஒத்திருக்கும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
புதிய தலைமுறை KONA எலக்ட்ரிக் மற்றும் CRETA EV
புதிய தலைமுறை ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக், மாற்றியமைக்கப்பட்ட K3 பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட இருக்கிறது. புதிய ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பம், முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வெளிப்புறம் ஆகியவை ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்கில் சேர்க்கப்பட இருக்கும் புதிய அப்டேட்களாகும். உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இது 2024 இன் இறுதியில் அல்லது 2025 இன் தொடக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். மேலும், CRETA வை போன்ற புதிய நடுத்தர அளவிலான EV 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் மாருதி சுசுகி eVX போன்ற புதிய கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.