NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்தியாவிற்கான புதிய மைக்ரோ-SUV.. Exter குறித்த தகவல்கள்! 
    இந்தியாவிற்கான புதிய மைக்ரோ-SUV.. Exter குறித்த தகவல்கள்! 
    ஆட்டோ

    இந்தியாவிற்கான புதிய மைக்ரோ-SUV.. Exter குறித்த தகவல்கள்! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    April 25, 2023 | 04:43 pm 1 நிமிட வாசிப்பு
    இந்தியாவிற்கான புதிய மைக்ரோ-SUV.. Exter குறித்த தகவல்கள்! 
    ஹூண்டாயின் புதிய மைக்ரோ-எஸ்யூவி எக்ஸ்டர்

    தங்களுடைய புதிய மைக்ரோ-எஸ்யூவியின் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டு டிசைனைக் வெளிப்படுத்தும் வகையில் புதிய புகைப்படங்களை வெளியிட்டிருக்கிரது ஹூண்டாய் நிறுவனம். எக்ஸ்டர் (Exter) எனப் பெயரிடப்பட்ட இந்த புதிய மைக்ரோ-எஸ்யூவியை இந்தியாவிற்காகவே உருவாக்கி வருகிறது ஹூண்டாய். வரும் ஜூலை 2023-ல் உற்பத்தி தொடங்கப்பட்டு, ஆகஸ்ட் மாதம் இந்த எஸ்யூவி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைக்ரோ-எஸ்யூவியை இந்தியாவில் உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தில் இருக்கிறது ஹூண்டாய். பெட்ரோல் இன்ஜின் வேரியன்ட்களை மட்டுமே வெளியிடவிருக்கிறது ஹூண்டாய். அடுத்த வரும் நாட்களில் CNG வேரியன்டும் உடன் சேரலாம். மாருதி இக்னிஸ், சிட்ரன் C3 மற்றும் டாடா பஞ்ச் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக இந்தியாவில் களமிறங்குகிறது எக்ஸ்டர்.

    இன்ஜின் மற்றும் விலை: 

    3.8 மீட்டர் மட்டுமே நீளம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த மைக்ரோ-எஸ்யூவியில் ஹூண்டாய் கிராண்டு i10 நியாஸ் ஹேட்ச்பேக்கில் பயன்படுத்தப்பட்ட அதே அடித்தளக் கட்டுமானமே பயன்படுத்தப்படவிருக்கிறது. சஸ்பென்ஷன் செட்டப்பும் கிட்டத்தட்ட அதே தான். ஆனால், கிரௌண்டு கிளியரன்ஸ் மட்டும் கொஞ்சம் கூடுதலாகக் கொடுக்கப்படவிருக்கிறது. ஹூண்டாயின் நியாஸ், ஆரா, i20 மற்றும் வென்யூவில் பயன்படுத்தப்பட்ட 83hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை இதற்கும் கொடுக்கவிருக்கிறது. கூடுதலாக 1.0 லிட்டர் டர்போபெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் கொடுக்கப்படலாம். மேலும், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ்கள் கொடுக்கப்படலாம். நியாஸூக்கு மேல், வென்யூவிற்கு கீழ் ரூ.6 - ரூ.9 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த எக்ஸ்டர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஹூண்டாய்
    ஆட்டோமொபைல்
    புதிய கார்

    ஹூண்டாய்

    பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய அப்டேட்டை வெளியிட்டது ஹூண்டாய்! ஆட்டோமொபைல்
    2023-இல் வெளியாகும் மாருதி மற்றும் ஹூண்டாய் டாடா கார்கள்! கார் உரிமையாளர்கள்
    ஹூண்டாய் புதிய சொனாட்டா செடான் - 5 முக்கிய அம்சங்கள் என்ன? வாகனம்
    ராணுவ மாடலில் வெளியாகப்போகும் ஹூண்டாயின் Mufasa SUV கார்! தொழில்நுட்பம்

    ஆட்டோமொபைல்

    புதிய வாகனத்தை உருவாக்கி வரும் ஃபோக்ஸ்வாகன்.. இந்தியாவிற்கான திட்டம் என்ன?  ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    எப்படி இருக்கிறது ஹீரோவின் எக்ஸ்பல்ஸ் 200T 4V: ரிவ்யூ  ஆட்டோமொபைல் ரிவ்யூ
    ஹோண்டா ஆக்டிவா 125 vs சுஸூகி அக்சஸ் 125, இரண்டில் எது பெஸ்ட்?  ஹோண்டா
    எலெக்ட்ரிக் வாகன மேம்பாட்டிற்கு ரூ.1 லட்சம் கோடி.. அறிவிப்பை வெளியிட்டது ஜாகுவார்!  டாடா மோட்டார்ஸ்

    புதிய கார்

    வெளியானது மாருதி சுஸூகியின் புதிய FronX எஸ்யூவி.. விலை என்ன?  எஸ்யூவி
    லம்போர்கினியின் புதிய ரெவால்டோ ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்.. என்ன ஸ்பெஷல்?  லம்போர்கினி
    இந்தியாவில் தங்களது புதிய 'காமெட் EV'-யை அறிமுகப்படுத்தியது எம்ஜி மோட்டார்!  எம்ஜி மோட்டார்
    ரோல்ஸ் ராய்ஸ் உருவாக்கிய பிரத்தியேகமான 'கோஸ்ட்' மாடல் கார்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?  கார்
    அடுத்த செய்திக் கட்டுரை

    ஆட்டோ செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Auto Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023