LOADING...
கோடை காலத்தில் கார் மங்குவதைத் தடுப்பது எப்படி? அடர் நிற கார்களுக்கான 5 முக்கிய பராமரிப்பு குறிப்புகள்
கோடை காலத்தில் கார் மங்குவதைத் தடுப்பதற்கான 5 முக்கிய பராமரிப்பு குறிப்புகள்

கோடை காலத்தில் கார் மங்குவதைத் தடுப்பது எப்படி? அடர் நிற கார்களுக்கான 5 முக்கிய பராமரிப்பு குறிப்புகள்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 23, 2026
07:17 pm

செய்தி முன்னோட்டம்

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, அடர் நிறக் கார்கள் தங்கள் பளபளப்பை விரைவாக இழக்கும் வாய்ப்பு அதிகம். சூரியனின் புற ஊதாக் கதிர்கள் மற்றும் வெப்பத்தை அடர் நிறங்கள் அதிகம் உறிஞ்சுவதால், பெயிண்ட் மங்கலாகிறது. உங்கள் காரின் நிறத்தையும் பொலிவையும் கோடைக் காலத்தில் பாதுகாக்க உதவும் எளிய வழிமுறைகள் இதோ:

பார்க்கிங்

நிழலில் நிறுத்துதல்

நேரடி சூரிய ஒளியைத் தவிர்ப்பதே உங்கள் காரைப் பாதுகாப்பதற்கான முதல் மற்றும் மிக முக்கியமான வழியாகும். முடிந்தவரை கேரேஜ் அல்லது நிலத்தடி வாகன நிறுத்துமிடங்களில் (Basement parking) காரை நிறுத்துங்கள். நிழல் இல்லாத இடங்களில் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், மரங்களுக்கு அடியில் நிறுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் பறவைகளின் எச்சம் மற்றும் மரங்களிலிருந்து வடியும் பிசின் பெயிண்ட்டை விரைவாகப் பாதிக்கும்.

கவர்கள்

தரமான கார் கவர்கள்

காரை வெட்டவெளியில் நிறுத்தும்போது, சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் தரமான கார் கவரைப் பயன்படுத்துங்கள். இது காருக்குப் போடப்படும் சன்ஸ்கிரீன் போலச் செயல்பட்டு, புற ஊதாக் கதிர்கள் பெயிண்ட்டைத் தாக்காமல் தடுக்கிறது. கவரில் தூசி துகள்கள் இருந்தால் கீறல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவரை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Advertisement

பாதுகாப்பு

பாதுகாப்பு அடுக்குகள்

அடர் நிறக் கார்களுக்குப் பாதுகாப்பு அடுக்குகள் மிகவும் அவசியம். சூரிய ஒளியிலிருந்து பெயிண்ட்டைப் பாதுகாக்கப் பல்வேறு தேர்வுகள் உள்ளன: மெழுகு (Wax): பளபளப்பைக் கூட்டவும், அடிப்படைப் பாதுகாப்புக்கும் ஏற்றது. சீலண்ட் (Sealant): மெழுகை விட அதிக காலம் நீடிக்கும், வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டது. செராமிக் கோட்டிங் (Ceramic Coating): நீண்ட காலப் பாதுகாப்பு மற்றும் சிறந்த பளபளப்பை வழங்குகிறது. பி.பி.எஃப் (PPF): கீறல்கள் மற்றும் மங்குதலில் இருந்து முழுமையான பாதுகாப்பை அளிக்கும் ஒரு வெளிப்படையான பாதுகாப்பு அடுக்கு.

Advertisement

கிளீனிங்

சரியான முறையில் கழுவுதல்

கோடையில் கார் கழுவும்போது சில விஷயங்களைக் கட்டாயம் கவனிக்க வேண்டும். வீட்டு உபயோ டிடர்ஜென்ட் பயன்படுத்தாமல், காரின் பெயிண்டிற்கு ஏற்ற pH-பேலன்ஸ்டு ஷாம்புகளைப் பயன்படுத்துங்கள். எப்போதும் நிழலான இடத்தில்தான் காரைக் கழுவ வேண்டும். மென்மையான மைக்ரோஃபைபர் துணிகளைப் பயன்படுத்துவது, பெயிண்ட்டில் தேவையற்ற கீறல்கள் விழுவதைத் தடுக்கும்.

பாதுகாப்பு

உட்புறப் பாதுகாப்பு

வெப்பம் காருக்குள் புகாமல் இருக்க விண்ட்ஷீல்டு சன்ஷேடுகள் மற்றும் ஜன்னல் டிண்டுகளை பயன்படுத்தலாம். இவை காரின் உட்புறக் காற்றை ஓரளவு குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு, டேஷ்போர்டு போன்ற உட்புறப் பாகங்கள் வெயிலால் நிறம் மாறுவதைத் தடுக்கின்றன. மேலும், காரைக் கழுவும்போது கடுமையான ரசாயனங்களைக் கொண்ட தயாரிப்புகளைத் தவிர்ப்பது, பெயிண்ட்டின் ஆயுளை நீண்ட காலத்திற்கு நீட்டிக்கும்.

Advertisement