என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கின்றன மாருதி ஃப்ரான்க்ஸின் CNG வேரியன்ட்கள்
தங்களுடைய புதிய காம்பேக்ட் எஸ்யூவியான ஃப்ரான்க்ஸை கடந்த ஏப்ரலில் இந்தியாவில் வெளியிட்டது மாருதி. இந்த மாதம் அந்த ஃப்ரான்க்ஸ் மாடலின் CNG வேரியன்டை இந்தியாவில் வெளியிட்டது மாருதி சுஸூகி. சிக்மா மற்றும் டெஸ்டா என இரண்டு வேரியன்ட்களாக வெளியாகியிருக்கிறது ஃப்ரான்க்ஸ். இந்த இரு வேரியன்ட்களிலும் என்னென்ன வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன? ஃப்ரான்க்ஸ் CNG சிக்மா வேரியன்ட்: அடிப்படை மாடலான சிக்மா ரூ.8.42 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வேரியன்டில், ப்ரொஜெக்டர் ஹாலஜன் முகப்பு விளக்குகள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு விண்டோஸ், கீலெஸ் எண்ட்ரி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம், இரண்டு ஏர்பேக்குகள் மற்றும் 15-இன்ச் ஸ்டீயரிங் வீல் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
மாருதி சுஸூகி ஃப்ரான்க்ஸ் CNG டெல்டா வேரியன்ட்:
சிக்மா வேரியன்டில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து வசதிகளும் டெல்டா வேரியன்டிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வேரியன்டானது ரூ.9.27 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது. இந்த CNG டெல்டா மாடலில் கூடுதலாக, 4-ஸ்பீக்கர் சவுண்டு சிஸ்டம், ஸ்டீயரிங் மவுண்டட் கண்ட்ரோல்ஸ், ரியர் பார்சல் ட்ரே, பக்கவாட்டு கண்ணாடி இன்டிகேட்டர்கள், 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் அசிஸ்டன்ஸ் மற்றும் OTA அப்டேட்கள் ஆகிய வசதிகள் கொடுகப்பட்டிருக்கின்றன. ஃப்ரான்க்ஸ் CNG மாடலானது, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆகிய இரண்டு பெட்ரோல் இன்ஜின்களைக் கொண்டு வெளியாகியிருக்கிறது.