தொடக்கநிலை எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவியை உருவாக்கி வரும் ஃபோக்ஸ்வாகன்
செய்தி முன்னோட்டம்
ஜெர்மனியைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வாகன், 2026ம் ஆண்டு புகிய தொடக்கநிலை எலெக்ட்ரிக் எஸ்யூவி ஒன்றை வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
2025ம் ஆண்டு புதிய தொடக்கநிலை எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடலான ID.2-வை வெளியிட ஃபோக்ஸ்வாகன் திட்டமிட்டிருக்கும் நிலையில், அதனைத் தொடர்ந்து இந்தப் புதிய தொடக்கநிலை எலெக்ட்ரிக் எஸ்யூவியின் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் ஏற்கனவே விற்பனையில் இருந்த எரிபொருள் காரான போலோவிற்கு மாற்றாக ID.2-வை வெளியிட ஃபோக்ஸ்வாகன் திட்டமிட்டிருக்கும் நிலையில், அதன் மற்றொரு எரிபொருள் காரான T-கிராஸூக்கு மாற்றாக புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிவை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
ஃபோக்ஸ்வாகன்
புதிய ஃபோக்ஸ்வாகன் எலெக்ட்ரிக் எஸ்யூவி:
ஃபோஸ்க்வாகனின் தொடக்க நிலை பிளாட்ஃபார்மான நீளம் குறைவான MEB பிளாட்ஃபார்மிலேயே மேற்கூறிய இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களையும் கட்டமைக்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
இந்த இரு எலெக்ட்ரிக் கார்களையும் முதற்கட்டமாக ஐரோப்பிய சந்தைகளிலும், அதனைத் தொடர்ந்து உலகளவிலும் வெளியிடத் ஃபோக்ஸ்வாகன் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
பிளாட்ஃபார்ம் மட்டுமின்றி ID.2 எலெக்ட்ரிக் மாடலில் கொடுக்கப்படவிருக்கும் அதே வசதிகளையே புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவியிலும் அந்நிறுவனம் கொடுக்கவிருக்கிறது.
223hp பவரை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டாருடன், 38kWh மற்றும் 56kWh என இரண்டு பேட்டரி பேக் தேர்வுகளை மேற்கூறிய இரண்டு எலெக்ட்ரிக் கார்களிலும் அந்நிறுவனம் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வாகனங்கள் அதிகபட்சமாக 450 கிமீ ரேஞ்சைக் கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.