LOADING...
தேசிய நெடுஞ்சாலைகளில் EV புரட்சி; சென்னை - பெங்களூரு உட்பட 74 வழித்தடங்களில் 4,874 சார்ஜிங் நிலையங்கள்!
தேசிய நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரம்

தேசிய நெடுஞ்சாலைகளில் EV புரட்சி; சென்னை - பெங்களூரு உட்பட 74 வழித்தடங்களில் 4,874 சார்ஜிங் நிலையங்கள்!

எழுதியவர் Vasuki
Jun 15, 2026
01:20 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில்பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு தேவைகளுக்காக வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் நோக்கில், மின்சார வாகன (EV) உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு தற்பொழுது மாபெரும் நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் கண்டறியப்பட்டுள்ள 74 மிக முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்காகப் பிரத்தியேகமாக 4,874 பொது சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு அதிரடியாக முடுக்கிவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

நெடுஞ்சாலைகளில் இவி உள்கட்டமைப்புக்கு ரூ.2,000 கோடி மானியம்

நாட்டில் சுற்றுச்சூழல் மாசைக் குறைத்து மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஃபேம் (FAME) திட்டத்தின் தொடர்ச்சியாக, தற்பொழுது பி.எம் இ-டிரைவ் (PM E-Drive Scheme) என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே பெட்ரோல் பங்க்குகள் இருப்பதைப் போன்ற ஒரு தடையற்ற கட்டமைப்பை உருவாக்குவதற்காக, இதிட்டத்தின் கீழ் சார்ஜிங் உள்கட்டமைப்புக்கு மட்டும் 2,000 கோடி ரூபாய் மானிய நிதியை மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. தற்போது இந்தியாவில் உள்ள மொத்தம் 1.46 லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள 599 தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனப் போக்குவரத்து மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் 74 முக்கிய வழித்தடங்கள் முன்னுரிமைக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 தனித்தனி வழித்தடங்கள்

தமிழ்நாட்டிற்கு ரூ.34.6 கோடி நிதி ஒதுக்கீடு

மத்திய அரசால் கண்டறியப்பட்ட இந்த 74 வழித்தடங்களில், 50 வழித்தடங்கள் மின்சாரகார்கள் மற்றும் பேருந்துகளுக்காகவும், 24 வழித்தடங்கள் மின்சாரசரக்கு லாரிகளுக்காகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக, 24 முக்கிய வழித்தடங்களில் 4,874 அதிவேகசார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்காக 503 கோடி ரூபாய் நிதிக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இமாலயதிட்டத்தில் தமிழகத்திற்கான சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மட்டும் 34.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அடையாளம் கண்டுள்ள 74 முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில், தமிழகத்தின் வழியே கடந்து செல்லும் மற்றும் அண்டை மாநிலங்களை இணைக்கும் 55 மிக முக்கிய சாலைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் முதற்கட்டமாக 498 அதிவேகப் பொது சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

Advertisement

முக்கிய நெடுஞ்சாலைகள்

தமிழகத்தில் சார்ஜிங் மையங்கள் அமையவுள்ள முக்கிய நெடுஞ்சாலைகள்

சென்னை - நாகர்கோவில் சென்னை - திருச்சி சென்னை - தூத்துக்குடி பெங்களூரு - கோவை கோவை - திருச்சி கோவை - நாகை ஆகிய அதிமுக்கிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் இந்த அதிவேகச் சார்ஜிங் மையங்கள் தற்பொழுது அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டு வருகின்றன. இதே போல, அண்டை மாநிலமான கேரளாவின் தேசிய நெடுஞ்சாலைகளிலும் இவி கட்டமைப்பை வலுப்படுத்த 147 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐஓசிஎல் (IOCL), பிபிசிஎல் (BPCL) மற்றும் ஹெச்பிசிஎல் (HPCL) ஆகியவற்றுடன் இணைந்து மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் இந்த திட்டம் தமிழகம் மற்றும் இந்திய அளவில் மின்சார வாகனபோக்குவரத்தில் ஒரு புதிய மைல்கல்லாக அமையப் போவது உறுதி என அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.

Advertisement