
எமிரேட்ஸின் ஏ-380 விமானம் ரெய்ண்டீரால் இயக்கப்படும் வீடியோ வைரல்
செய்தி முன்னோட்டம்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்லாக எமிரேட்ஸ் நிறுவனம் ஒரு வீடியோவை பகிர்ந்தது. அது பதிவேற்றிய சில நிமிடத்திலேயே பல லைக்குகளை பெற்றது. காரணம், எமிரேட்ஸின் ஏ-380 விமானத்தை ரெய்ண்டீர் இயக்குவது போல் அமைத்திருந்தது தான். எமிரேட்ஸின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரபட்ட இந்த வீடியோ, 600,000 லைக்குகளைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க
எமிரேட்ஸின் ஏ-380 விமானம் வீடியோ உருவான கதை
எல்டியாஸ்டி என்பவர் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். அவரது பல வேலைகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவற்றில், துபாயில் உள்ள மியூசியம் ஆஃப் தி ஃபியூச்சரில் இருந்து வரும் ஹாலிவுட் பாணி அறிவியல் புனைகதை வீடியோ, 1.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. ஒரு ராட்சத விண்கலம் போல் திறக்கும் எதிர்கால அருங்காட்சியகத்தின் முகப்பில் ராட்சத ஹெலிகாப்டர் தரையிறங்குவதை வீடியோ காட்டியது. எல்டியாஸ்டி, எமிரேட்ஸ்சுடன் இணைந்து ஏற்கனவே பணியாற்றியுள்ளார். கடந்த மாதம் உருவாக்கப்பட்ட மற்றொரு வைரல் வீடியோவில், எமிரேட்ஸ் விமானம் தரையிறங்குவதற்கு முன்பு அதன் இறக்கைகளை அசைத்து ஒரு பறவையை போல் தரையிறங்குவது போல் அமைந்து இருந்தது. அந்த வீடியோவை, துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பகிர்ந்துள்ளார்.