Page Loader
டெஸ்லாவின் ரோபோடாக்ஸியை ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எலான் மஸ்க் அறிவிப்பு
இந்த அறிவிப்பின் மூலம், டெஸ்லா பங்குகள் மூன்று சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்தது

டெஸ்லாவின் ரோபோடாக்ஸியை ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எலான் மஸ்க் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 06, 2024
09:01 am

செய்தி முன்னோட்டம்

இந்த கோடையில் டெஸ்லாவின் ரோபோடாக்சியின் அறிமுகம் இருக்கும் என்று எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தார். எலெக்ட்ரிக் கார் டெஸ்லாவின் தயாரிப்பாளரான மஸ்க்,"Tesla Robotaxi unveil ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெறும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எனினும் இது குறித்து வேறு எந்த விவரங்களையும் அவர் வழங்கவில்லை. இந்த அறிவிப்பின் மூலம், டெஸ்லா பங்குகள் மூன்று சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்தது. மின்சார கார்கள் தாங்களாகவே செயல்படுவதற்கு டெஸ்லா தனது சிஸ்டங்களில் செய்து வரும் மாற்றங்களை பற்றி மஸ்க் நீண்ட காலமாக பெருமையாகக் கூறி வருகிறார்.

embed

டெஸ்லாவின் ரோபோடாக்ஸி

Tesla Robotaxi unveil on 8/8— Elon Musk (@elonmusk) April 5, 2024

டெஸ்லா

டெஸ்லாவின் மின்சார கார்

FSD (Full Self-Driving) கொண்ட டெஸ்லா மாடல்கள் "எதிர்காலத்தில் மனிதர்கள் சோர்ந்துபோய் குடிபோதையில் கார்களை ஓட்டுவது விசித்திரமாகத் தோன்றும் அளவுக்கு மனிதாபிமானமற்றதாக இருக்கும்!" என்று அவர் மார்ச் மாதம் எக்ஸ்-இல் ஒரு இடுகையில் கூறினார். FSD உடைய டெஸ்லா வாகனங்களின் உரிமையாளர்கள், தங்கள் கார்களை சும்மா நிறுத்திவிடாமல், ரோபோடாக்சிகளாகப் பயன்படுத்த முடியும் என்றும் மஸ்க் கூறியுள்ளார். அதன் சாத்தியம் இருந்தபோதிலும், அமெரிக்காவில் சுய-ஓட்டுநர் வாகனங்களின் வெளியீடு பல தடைகளை சந்தித்து வருகிறது. இது கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.