சாலையில் பாயும் சிறுத்தை! டுகாட்டி XDiavel V4 இந்தியாவில் அறிமுகம்; விலை மற்றும் சிறப்பம்சங்கள்
செய்தி முன்னோட்டம்
இத்தாலிய சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி, தனது புதிய ரக ஸ்போர்ட்ஸ் க்ரூஸர் பைக்கான டுகாட்டி XDiavel V4 மாடலை திங்கட்கிழமை (டிசம்பர் 29) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய மாடல்களை விட அதிக சக்தி வாய்ந்த என்ஜின் மற்றும் நவீன வசதிகளுடன் இது வந்துள்ளது. இந்தியாவில் டுகாட்டி XDiavel V4 மாடல் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதில் பர்னிங் ரெட் (Burning Red) மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ₹30.89 லட்சமாகவும், பிளாக் லாவா (Black Lava) மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ₹31.19 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
என்ஜின்
என்ஜின் மற்றும் வேகம்
இந்த பைக்கில் 1,158சிசி V4 கிராண்டூரிஸ்மோ (Granturismo) என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது டுகாட்டியின் மோட்டோ ஜிபி (MotoGP) பைக்குகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. 168 பிஎச்பி பவர் மற்றும் 126 நிமீ டார்க் திறனை வெளிப்படுத்தும். வெறும் 3 வினாடிகளுக்குள் 0லிருந்து 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டது. முந்தைய மாடலை விட இது 6 கிலோ எடை குறைவானது (மொத்த எடை 229 கிலோ).
பாதுகாப்பு
நவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு
இந்த பைக்கில் ஓட்டுநரின் சவுகரியத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் பல்வேறு தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஸ்போர்ட், டூரிங், அர்பன் மற்றும் வெட் ஆகிய நான்கு நிலைகளில் ஓட்டும் வசதி உள்ளது. 6.9 அங்குல டிஎஃப்டி டிஸ்ப்ளே மூலம் நேவிகேஷன் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பைப் பெறலாம். கார்னரிங் ஏபிஎஸ், ட்ராக்ஷன் கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல் மற்றும் குரூஸ் கண்ட்ரோல் போன்ற நவீன பாதுகாப்பு வசதிகள் உள்ளன. 240-செக்ஷன் கொண்ட பிரம்மாண்டமான பின் பக்க டயர் மற்றும் சிங்கிள் சைடட் ஸ்விங்கார்ம் பைக்கிற்கு ஒரு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. சொகுசு மற்றும் வேகம் இரண்டையும் விரும்பும் பைக் ஆர்வலர்களுக்கு இந்த டுகாட்டி XDiavel V4 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.