இந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி பனிகலே V2 பிளாக் மோட்டார்சைக்கிள்
டுகாட்டி அதன் பனிகலே V2 மாடலை ஒரு புதிய கருப்பு நிற மாறுபாட்டின் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.20.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இது அறிமுகமாகியுள்ளது. டுகாட்டி பனிகலே V2 பிளாக் தற்போதுள்ள சிவப்பு மாடலை விட ரூ.30,000 அதிகமான விலையில் விர்க்கப்படுகிறது. இந்த புதிய மாறுபாடு தற்போது வாங்குவதற்கு தயாராக உள்ளது. விரைவில் டெலிவரி வசதியும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள், ஐப்ரோ LED DRLகள் கொண்ட இரட்டை ஹெட்லேம்ப் அமைப்பு உட்பட அதன் தனித்துவமான வடிவமைப்பு அம்சங்களை இதற்கு முந்தைய பதிப்புகளில் இருந்து தக்கவைத்துக் கொண்டது.
டுகாட்டி பனிகலே V2 பிளாக்கின் அம்சங்கள்
டுகாட்டி பனிகலே V2 பிளாக், ஃபேரிங் மற்றும் ஃப்யூவல் டேங்கில் சிவப்பு நிறத்துடன் கூடிய பளபளப்பான கருப்பு வண்ணப்பூச்சைக் கொண்டுள்ளது. இந்த மாடலின் அலாய் வீல்கள், சிவப்பு விளிம்பு பட்டையுடன் நுட்பமான மற்றும் கண்ணை கவரும் தோற்றத்தை கொண்டுள்ளன. இந்த மோட்டார்சைக்கிள் 955சிசி, லிக்விட்-கூல்டு, எல்-ட்வின் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 10,750ஆர்பிஎம்மில் 155எச்பி பவரையும், 9,000ஆர்பிஎம்மில் 104என்எம் பீக் டார்க்கையும் வழங்குகிறது. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அலுமினிய மோனோகோக் சட்டத்துடன் கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் பல ரைடிங் மோடுகள், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் என்ஜின் பிரேக் கண்ட்ரோல் போன்ற எலக்ட்ரானிக் எய்ட்ஸுடன் வருகிறது.