
2024ம் ஆண்டுக்கான 'Indian Car of the Year' விருதுக்கு போட்டியிடும் கார்கள்
செய்தி முன்னோட்டம்
2024ம் ஆண்டுக்கான 'Indian Car of the Year' (ICOTY) விருதுக்காகப் போட்டியிடும் கார்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பிரிவுகளின் கீழ், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்களின் இந்திய விற்பனை கார்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.
உலகளாவிய 'Car of the Year' (COTY) விருதுக்கான இறுதிப்பட்டியல் சில வாரங்களுக்கு முன்பு வெளியான நிலையில், தற்போது அதனைத் தொடர்ந்து ICOTY விருதுக்கான போட்டியாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதிகபட்சமாக, ஜெர்மனைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூவின் நான்கு இந்திய விற்பனை கார் மாடல்கள் இந்தப் பட்டியல்களில் இடம் பெற்றிருக்கின்றன.
கார்
ICOTY 2024 விருதுக்குப் போட்டியிடும் கார்கள்:
ஒட்டுமொத்தமாக ICOTY 2024 விருதுக்கு, ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் எக்ஸ்டர், ஹூண்டாய், வெர்னா, மாருதி சுஸூகி ஜிம்னி, டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், மஹிந்திரா எக்யூவி400, சிட்ரன் C3 ஏர்கிராஸ் மற்றும் எம்ஜி காமெட் ஆகிய கார்கள் போட்டியிடுகின்றன.
ப்ரீமியம் கார் விருதுக்கு, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஹூண்டாய் அயானிக் 5, லெக்சஸ் LX, ரேஞ்சு ரோவர் ஸ்போர்ட், மெர்சிடீஸ்-பென்ஸ் GLC, வால்வோ C40 ரீசார்ஜ், பிஎம்டபிள்யூ M2 மற்றும் பிஎம்டபிள்யூ X1 ஆகிய கார்கள் போட்டியிடுகின்றன.
பசுமை வாகன விருதுக்கு, ஹூண்டாய் அயானிக் 5, சிட்ரன் eC3, மஹிந்திரா எக்ஸ்யூவி400, எம்ஜி காமெட், பிஎம்டபிள்யூ i7, BYD அட்டோ 3, வால்வோ C40 ரீசார்ஜ் மற்றும் மெர்சிடீஸ்-பென்ஸ் EQE ஆகிய கார்கள் போட்டியிடுகின்றன.
ஆட்டோமொபைல்
ICOTY 2024 விருது:
2024ம் ஆண்டுக்கான ICOTY விருதுக்கான போட்டியாளர்களில் எஸ்யூவிக்களே அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதனைத் தொடர்ந்து செடான், MPV மற்றும் இரண்டு டோர் எலெக்ட்ரிக் கார்கள் இடம்பெற்றிருக்கின்றன.
விருது பெறும் கார்களை பல்வேறு ஆட்டோமோட்டிவ் பப்ளிகேஷன்களைச் சேர்ந்த 20 நடுவர்கள் இணைந்து தேர்தெடுக்கவிருக்கிறார்கள்.
2023ம் ஆண்டுக்கான ICOT 2023 விருதை கியா கேரன்ஸ் மாடல் வென்றிருக்கிறது. அதே போல், 2023ம் ஆண்டுக்கான ப்ரீமியம் கார் விருதை மெர்சிடீஸ் பென்ஸ் EQS 580 மாடலும், பசுமை வாகன விருதை கியா EV6 மாடலும் வென்றிருக்கின்றன.
இதுவரை ஏழு முறை ICOTY விருதுகளை வென்று முன்னணியில் இருக்கிறது ஹூண்டாய். அதனைத் தொடர்ந்து நான்கு முறை விருது வென்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது மாருதி சுஸூகி.