ரூ.10 லட்சத்திற்குள் இந்தியாவில் விற்பனையாகி வரும் CNG கார்கள்
இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், அதற்கு மாற்றாக CNG மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை தேடத் தொடங்கியிருக்கின்றனர் வாடிக்கையாளர்கள். எலெக்ட்ரிக் வாகனங்களின் அதிக விலை மற்றும் கட்டமைப்பு குறைவாக இருப்பதன் காரணமாக, CNG-யை பெரிதும் விரும்புகின்றனர் கார் வாடிக்கையாளர்கள். இந்தியாவில் ரூ.10 லட்சம் விலைக்குள் விற்பனை செய்யப்படும் கார்களின் பட்டியல் இங்கே. டாடா டியாகோ iCNG: விலை: ரூ.6.55 லட்சம் முதல் 73hp பவர் மற்றும் 95Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய இன்ஜினுடன், இந்தியாவின் விலை குறைந்த CNG மாடலாக வலம் வருகிறது டாடாவின் டியாகோ iCNG. டூயல்-டோன் டேஷ்போர்டில் தொடங்கி ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் வரை பல மேம்பட்ட வசதிகளைக் கொண்டிருக்கிறது இந்தக் கார்.
ஹூண்டாய் கிராண்டு i10 நியாஸ்:
விலை: ரூ.7.68 லட்சம் முதல் 68hp பவர் மற்றும் 95.2Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர், இன்லைன் ஃபோர் இன்ஜினைக் கொண்டிருக்கிறது இந்த கிராண்டு i10 நியாஸ். 8-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் பேனல், சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றிருக்கிறது இந்த i10 நியாஸ் CNG. டொயோட்டா கிளான்ஸா CNG: விலை: ரூ.8.6 லட்சம் முதல் 76.4hp பவர் மற்றும் 98.5Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர், இன்லைன் ஃபோர் இன்ஜினைப் பெற்றிருக்கிறது டொயோட்டா கிளாஸ்ஸா CNG. 9.0-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் பேனல், இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், டூயல்-டோன் டேஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருக்கிறது இந்த கிளான்ஸ CNG.
மாருதி சுஸூகி பெலினோ S-CNG:
விலை: ரூ.8.35 லட்சம் முதல் 76.4hp பவர் மற்றும் 98.5Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, 1.2 லிட்டர், இன்லைன் ஃபோர், k சீரிஸ் இன்ஜினைப் பெற்றிருக்கிறத இந்த பெலினோ S-CNG. 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே, கீலெஸ் எண்ட்ரி, ஹெட்ஸ்அப் டிஸ்பிளே மற்றும் டூயல் டோன் டேஷ்போர்டு உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருக்கிறது இந்த பெலினோ S-CNG. டாடா ஆல்ட்ராஸ் iCNG: விலை: 7.55 லட்சம் முதல் 77hp பவர் மற்றும் 103Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, 1.2 லிட்டர் இன்ஜினைப் பெற்ற டாடாவின் மற்றுமொரு விலை குறைந்த CNG மாடல் இந்த ஆல்ட்ராஸ் iCNG. வாய்ஸ் ஆக்டிவேட்டட் சன்ரூஃப், ரியர்-வ்யூ கேமரா உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது இந்த ஆல்ட்ராஸ் CNG மாடல்.