
இந்தியாவில் 'C3' மாடலின் டாப் வேரியண்டை வெளியிட்டது சிட்ரன்!
செய்தி முன்னோட்டம்
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலையில் தங்களுடைய 'C3' மாடல் காரை ரூ.5.71 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டது சிட்ரன். அப்போது லைவ், ஃபீல் என இரண்டு வேரியண்ட்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியானது C3.
தற்போது அந்த C3 மாடலின் டாப் வேரியண்டான ஷைன் வேரியண்டை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது சிட்ரன். ரூ.7.60 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது இந்த புதிய ஷைன் வேரியண்ட்.
முந்தைய லைவ் மற்றும் ஃபீல் வேரியண்ட்களில் இல்லாத பல புதிய வசதிகளை இந்த ஷைன் வேரியண்ட்டில் கொடுத்திருக்கிறது சிட்ரன். மேலும், ரூ.12,000-க்கும் வைப் பேக் ஒன்றும் இந்த புதிய வேரியண்டிற்கு வெளியிட்டிருக்கிறது சிட்ரன்.
ஆட்டோமொபைல்
என்னென்ன வசதிகள்:
5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸூடன், 82hp பவர் மற்றும் 115Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே இந்த புதிய வேரியண்ட் வெளியாகியிருக்கிறது.
எலெக்ட்ரிக்லாக அட்ஜஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான விங் மிரர்கள், ரியர் பார்க்கிங் கேமரா, முன்பக்க ஃபாக் விளக்குகள் ஆகிய வசதிகள் புதிய C3-யில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், டீஃபாகர் ஆகியவையும் புதிய சிட்ரனில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
புதிய C3-யில் 15-இன்ச் அலாய் வீல்களை ஸ்டாண்டர்டாகவே கொடுத்துவிடுகிறது சிட்ரன். இது முந்தைய வேரியண்ட்களில் ஆப்ஷனாக, அதுவும் டீலர்கள் மூலமாக மட்டுமே கிடைத்து வந்தது. புதிய C3-யில் My Citroen Connect வசதியையும் அளித்திருக்கிறது.